வாடிக்கையாளர்கள் ஷாக், வங்கி வட்டியை குறைத்தது PNB

10 லட்சத்துக்கும் குறைவான வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை PNB ஆண்டுக்கு 2.70 சதவீதமாகக் குறைத்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 5, 2022, 02:07 PM IST
  • PNB வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி
  • சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு
  • இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாகும்
வாடிக்கையாளர்கள் ஷாக், வங்கி வட்டியை குறைத்தது PNB title=

சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை குறைப்பதாக பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 4 முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது 10 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 2.7% வட்டி வழங்கப்படும். அதேபோல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல், 500 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் தொகைக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வழங்கப்படும். முன்னதாக வழங்கப்பட்ட வட்டியை விட தற்போது 0.5% குறைத்துள்ளது. அதன்படி முன்பு 10 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொண்ட கணக்குகளுக்கு 2.75% வட்டியும், 10 லட்சம் முதல் 500 கோடி ரூபாய் வரை டெபாசிட் கொண்ட கணக்குகளுக்கு 2.8% வட்டியும் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அமேசானையே அலறவிட்ட ஹேக்கர்ஸ்!- நெட்டிசன்ஸ் ஷாக்!

அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 0.5% முதல் 2.5% வரை வட்டி வழங்கி வருகிறது. இதற்கான வட்டி விகிதங்களின் பட்டியலை இங்கே விரிவாக காண்போம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி 1 ஆண்டு வரை - 0.5% வரை வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி 2 ஆண்டு வரை - 0.6% வரை வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி 3 ஆண்டு வரை - 0.75% வரை வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி நடுத்தர கால டெபாசிட் - 2.25% வரை வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி நீண்டகால டெபாசிட் - 2.5% வரை வட்டி

பஞ்சாப் நேஷனல் வங்கி சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 2.90 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை மெச்சுரிட்டி அடையும் நிலையான வைப்புகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News