ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த கட்டணத்தை அதிகரித்தது வங்கி

ஜனவரி 01 முதல் உள்நாட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களிலும் திருத்தம் செய்வதாக வங்கி அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 11:14 AM IST
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த கட்டணத்தை அதிகரித்தது வங்கி title=

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணத்தை ஜனவரி 01, 2022 முதல் திருத்தப் போவதாக தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

ஜனவரி 01 முதல் உள்நாட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களிலும் திருத்தம் செய்வதாக வங்கி அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் (ICICI bank) ஏடிஎம்-கள்/பண மறுசுழற்சி இயந்திரங்களில் (cash withdrawals) செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு ஒரு மாதத்தில் முதல் 5 நிதி பரிவர்த்தனைகள் இலவசமாக உள்ளன. அதன்பின், ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.20 வசூலிக்கப்படும்.

இருப்பினும், ATM பரிவர்த்தனை கட்டணங்களில் செய்யப்படும் திருத்தத்திற்குப் பிறகு, ஒரு மாதத்தில் முதல் 5 நிதி பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும், அதன்பின், ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும்.

ALSO READ:இந்த வங்கி 20 லட்சம் ரூபாய்க்கான பலனை உங்களுக்கு இலவசமாக அளிக்கிறது! 

அனைத்து நிதி அல்லாத பரிவர்த்தனைகளும் இலவசமாக இருக்கும். (கணக்கிலிருந்து பணம் எடுப்பது நிதி பரிவர்த்தனையாகும். பண இருப்பு விசாரணை, மினி-ஸ்டேட்மெண்ட், மற்றும் பின் மாற்றம் ஆகியவை நிதி அல்லாத பரிமாற்றங்களில் அடங்கும்)

ஏடிஎம் இண்டர்சேஞ்சில் (ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகள்) ஒரு மாதத்தில் 6 மெட்ரோ நகரங்களில் (மும்பை, புது தில்லி, சென்னை (Chennai), கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்) முதல் 3 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசமாக இருக்கும். மற்ற அனைத்து இடங்களிலும் ஒரு மாதத்தில் செய்யப்படும் முதல் 5 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசமாக இருக்கும்.

ஏடிஎம் (ATM Transactions) இண்டர்சேஞ்சில் (ஐசிஐசிஐ வங்கி அல்லாத ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகள்) ஒரு மாதத்தில் 6 மெட்ரோ நகரங்களில் (மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்) முதல் 3 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசமாக இருக்கும். மற்ற அனைத்து இடங்களிலும் ஒரு மாதத்தில் செய்யப்படும் முதல் 5 பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசமாக இருக்கும்.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 5 பரிவர்த்தனைகள் இலவசம், 6 மெட்ரோ நகரங்களில் 3 இலவசப் பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அதன்பின், ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 என்று இருக்கும். ATM பரிவர்த்தனையின் திருத்தத்திற்குப் பிறகு, இந்த தொகை, ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ. 21 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 ஆக இருக்கும்.

ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு ஏமாற்றம், அரசு தரப்பில் வந்த மிகப்பெரிய அப்டேட்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News