பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை!

சிபில் ஸ்கோர் தொடர்பான டேட்டாக்களில் சந்தேகமோ அல்லது தவறோ இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக வங்கிக்கு சென்றோ அல்லது காவல் நிலையத்திற்கு சென்றோ புகாராளிக்க வேண்டும்.    

Written by - RK Spark | Last Updated : Oct 25, 2022, 05:49 PM IST
  • ஆதார் மற்றும் பான் இந்தியாவில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் பல்வேறு மோசடியும் நடைபெற்று வருகிறது.
  • அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை!  title=

இன்றைய நவீன உலகில் எந்த அளவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதோ அதேயளவு அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளும் அதிகமாக தொடங்கிவிட்டது.  மோசடிக்காரர்கள் பலரும் நம்முடைய ரகசிய தகவல்களை பெற்று மோசடி செயலில் ஈடுபடுகின்றனர், அதிலும் குறிப்பாக முக்கிய ஆவணங்களான பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு தகவல்கள் திருடப்பட்டு மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  ஏறத்தாழ இந்தியாவில் இந்த இரண்டு ஆவணங்களையும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், கார்டுதாரர்கள் இப்போது கவனமாக இருக்க வேண்டும் அரசு எச்சரித்துள்ளது.  நமது பான் கார்டு தகவல்கள் திருடப்பட்டு கடன் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது, இதுபோன்ற மோசடிகளில் நாம் சிக்கி கொள்ளாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் விநியோக விதிகளில் பெரிய மாற்றம், இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள் 

உங்களது  பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை தெரியாத நபர்களிடம் கொடுக்கும் தவறை மறந்தும் கூட ஒருபோதும் செய்துவிடாதீர்கள், இதுமட்டுமின்றி உங்களது முக்கியமான ஆவணங்கள் எதையுமே அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  கடைகளில் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க செல்லும்போது, ஜெராக்ஸுடன் சேர்த்து அசல் ஆவணங்களையும் மறக்காமல் கையில் எடுத்து வந்து விடுங்கள்.  இதுபோன்று கடைகளில் நீங்கள் தவறவிடும் ஆவணங்கள் மோசடிக்காரர்களின் கைகளில் கிடைத்து உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்.  இப்போது நமக்கு தெரியாதவர்களை காட்டிலும், தெரிந்தவர்களாலேயே மோசடிகள் அதிகம் நடைபெறுவதால் உங்கள் ஆதார், பான் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்கள் சிபில் மதிப்பெண் தொடர்பான டேட்டாக்களில் ஏதேனும் சந்தேகமோ அல்லது தவறோ இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக வங்கிக்கு சென்றோ அல்லது காவல் நிலையத்திற்கு சென்றோ புகாராளிக்க வேண்டும்.  மேலும் அடிக்கடி உங்கள் சிபில் மதிப்பெண்ணையும் கண்காணித்து வருவது நல்லது, முன் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் நாம் எவ்வித ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மேலும் படிக்க | திருப்பதியில் பெருமாளை தரிசிக்க திட்டமா? டிசம்பர் மாத தரிசன ஆன்லைன் முன்பதிவு நாள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News