ரயில் பயணிகள் ஜாக்கிரதை! உங்கள் டிக்கெட்டும் போலியானது என்று எப்படி சரிபார்ப்பது?

டிக்கெட் விற்கப்படும் கவுண்டர்களில் (Ticket Window) இருந்து விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் தரவைத் திருடி, அதேபோல டிக்கெட் நகலை தயாரிப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இவை அனைத்தும் புரோக்கர்கள் மூலம் நடைபெறுவதாவும் அவர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2020, 11:35 AM IST
  • புரோக்கர்கள் ஒரிஜினல் டிக்கெட் தகவல்களை, கலர்பிரிண்ட் கொண்ட காகிதத்தில் அச்சிடுகிறார்கள்.
  • போலி டிக்கெட்டுடன் பயணிப்பவர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படலாம், அபராதம் வசூலிக்கப்படலாம்.
  • 100 போலி டிக்கெட்டுக்களை ரயில்வேயின் விசாரணைக் குழு கைப்பற்றியுள்ளது.
ரயில் பயணிகள் ஜாக்கிரதை! உங்கள் டிக்கெட்டும் போலியானது என்று எப்படி சரிபார்ப்பது? title=

புதுடெல்லி: ஜூன் முதல் 428 போலி டிக்கெட் சம்பந்தமான தகவல்களை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் 102 டிக்கெட்டுகள் ஏ.சி வகுப்பைச் சேர்ந்தவை. மும்பை மிரர் பத்திரிக்கை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, டிக்கெட் விற்கப்படும் கவுண்டர்களில் (Ticket Window) இருந்து விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் தரவைத் திருடி, அதேபோல டிக்கெட் நகலை தயாரிப்பதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இவை அனைத்தும் புரோக்கர்கள் மூலம் நடைபெறுவதாவும் அவர் கூறினார்.

அசல் டிக்கெட் போலவே இருக்கும்:
போலி டிக்கெட்டுகளின் இந்த மோசடி காரணமாக, ஒரே இருக்கைக்கு (Berth) இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ரயில் சேவைகள் தொடங்கப்படாத வரை காத்திருப்பு டிக்கெட் வழங்கப்படுவதில்லை என்று இந்திய ரயில்வே (Indian Railway) அதிகாரி தெரிவித்தார்.

புரோக்கர்கள் ஒரிஜினல் டிக்கெட் தகவல்களை, பார்ப்பதற்கு அசல் போலவே இருப்பதற்கு, கலர்பிரிண்ட் கொண்ட காகிதத்தில் அச்சிடுகிறார்கள். மேலும் அதில், பி.என்.ஆர் (PNR), ரயில் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கும். பயணிகளின் பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது. போலி டிக்கெட் என்று தெரியாமல் புரோக்கர்களிடம் அந்த ரயில் டிக்கெட்டை பெற்ற பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது தான், இந்த மோசடி குறித்து உண்மை வெளியாகிறது என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். 

ALSO READ |  இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செயலாம்!!

ஒரே ஒரு இருக்கைக்கு சண்டை:
புரோக்கர்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ரயில்வே பயணிகள் (Railway Passengers) இந்த மோசடி குறித்து தெரிவது இல்லை. டிக்கெட் தரவரிசை பட்டியலில் தங்கள் பெயர்களை இல்லாதபோது ரயில்வே தான் இதற்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டிவதாக மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். அத்தகைய சூழ்நிலையில் டிக்கெட் சோதனை செய்யும் TT-க்கு மிகவும் கடினம் என்றார்.

இதுபோன்ற சூழ்நிலையில், போலி டிக்கெட்டுடன் பயணிப்பவர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும், அதிலிருந்து அபராதம் வசூலிக்கப் படுவதாகவும் ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

போலி ரயில் டிக்கெட்டுகள் அச்சிடப்படுவது இப்படித்தான்:
ஜூன் மாதத்திலிருந்து, "சீனியர் சிட்டிசன் ஒதுக்கீட்டை" பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்பட்ட 100 டிக்கெட்டுக்களை ரயில்வேயின் விசாரணைக் குழு கைப்பற்றியுள்ளது. தயாரிக்கப்பட்ட போலி டிக்கெட்டுகள் வண்ண காகிதத்தில் அச்சிடப்பட்டன. அவை உண்மையானவை போல் தெரிகிறது. அதில் பெயர் மற்றும் வயது மட்டுமே மாற்றப்படுகின்றன.

ALSO READ |  சிறுமியை கடத்திய தந்தை, காப்பாற்றிய Indian Railway: 200 km non stop ஓட்டம்!!

விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், தரகர்கள் முதலில் மூத்த குடிமக்கள் ஒதுக்கீட்டில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். பின்னர் இந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்த பிறகு, மென்பொருளின் உதவியுடன் வயது மற்றும் பெயர்கள் மாற்றப்படுகின்றன. 

டிக்கெட் முன்பதிவு செய்ய தரகர்களிடமிருந்து விலகி இருங்கள்:
ஊரடங்கு விதியில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பணிக்குத் திரும்பி வருகிறார்கள். இதன் காரணமாக டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தரகர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ரயில்வே அதிகாரி கூறினார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News