Tata Curvv: ஹூண்டாய் க்ரெட்டா சில காலமாக டிரெண்டிங்கில் உள்ளது. Kia Seltos, Maruti Grand Vitara, Toyota Urban Cruiser Hyrider, MG Astor, VW Tigun மற்றும் Skoda Kushaq போன்ற SUVகள் அதனுடன் போட்டியிட முயற்சித்தாலும் அதை அசைக்க முடியவில்லை. இருப்பினும், இந்த பிரிவில் இருந்து விரைவில் புதிய டாடா எஸ்யூவி வரவுள்ளது. ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா தனது புதிய காரை காட்சிப்படுத்தியது.
அடுத்த ஆண்டுக்குள் சந்தைக்கு வரும் Tata Curvv, ஒரு மின்சார கார் ஆகும். டாடா கர்வ் காரின் ICE பதிப்பு சுமார் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது டாடாவின் போர்ட்ஃபோலியோவில் உள்ள சப்-4 மீட்டர் நெக்ஸான் மற்றும் 4.6-மீட்டர் ஹாரியர் இரண்டுக்கும் இடைப்பட்டது.
நெக்ஸான் காம்பாக்ட் எஸ்யூவியின் எக்ஸ்1 இயங்குதளத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பில் இந்த கார்உருவாக்கப்படுகிறது. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது இது 50 மிமீ நீளமான வீல்பேஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சலுகை விலையில் பெட்ரோல்! IOC - Kotak மஹிந்திராவின் எரிபொருள் கிரெடிட் கார்டு!
இது அடுத்த தலைமுறை 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நேரடி-உட்செலுத்தப்பட்ட பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படலாம், இது இந்த எஞ்சினுடன் வரும் பிராண்டின் முதல் மாடலாக இருக்கும்.
இந்த எஞ்சினுடன் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்கலாம். இது தவிர, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் இந்த காரில் இருக்கும். இது ஒரு பெரிய 1.5 லிட்டர் டர்போ DI நான்கு-பாட் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா Curvv கார், கூபே போன்ற கூரை, கூர்மையான வடிவமைப்புடன் நேர்த்தியான ORVMகளுடன் அருமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும், இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரின் வெளிப்புறங்களில் கனமான பாடி கிளாடிங், பெரிய முன் கிரில், ஹெட்லேம்ப்கள் போன்ற பல கவர்ச்சிகரமான கூறுகள் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ