Airtel vs Jio vs Vi: ஒப்பீட்டில் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டம் எதில் உள்ளது?

முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா (Vi) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல நல்ல செய்திகளை அளித்துள்ளன. இவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய அற்புதமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 02:26 PM IST
  • ரிலையன்ஸ் ஜியோ 30 நாள் திட்டத்தில், ரூ .247 மற்றும் ரூ .267 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாரதி ஏர்டெல்லின் 30 நாள் திட்டத்தின் விலை ரூ .299 ஆகும்.
  • ஏர்டெல் பிளாக் பல எளிய அம்சங்களை வழங்குகிறது.
Airtel vs Jio vs Vi: ஒப்பீட்டில் மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டம் எதில் உள்ளது?  title=

Best Recharge Plans: முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா (Vi) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல நல்ல செய்திகளை அளித்துள்ளன. இவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய அற்புதமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. ஜியோ 15, 30, 60, 90, மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் புதிய திட்டங்களை அறிவித்த பின்னர், பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவையும் இதே போன்ற பிரிவில் புதிய திட்டங்களை அறிவித்தன.

இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) 30 நாள் திட்டத்தில், ரூ .247 மற்றும் ரூ .267 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .247 மற்றும் ரூ .267 ஆகிய இரண்டு திட்டங்களிலும் 25 ஜிபி டேட்டா கிடைக்கின்றன. இந்த திட்டங்களில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. மேலும், ஜியோ திட்டத்துடன், ஜியோ செயலிகளுக்கான தொகுப்பின் கூடுதல் நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். 

வோடபோன்-ஐடியா (Vi) 30 நாட்களுக்கான ரூ .247 மற்றும் ரூ .267 திட்டம்:  

இந்த திட்டத்தில் நிறுவனம் 25 ஜிபி தரவையும் வழங்குகிறது. மேலும் திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கின்றன. கூடுதலாக, வோடபோன்-ஐடியா திட்டத்தில் உங்களுக்கு Vi மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் ஆகியவற்றுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது. 

பாரதி ஏர்டெல்லின் 30 நாள் திட்டத்தின் விலை ரூ .299 ஆகும். இந்த திட்டம் மொத்தம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கின்றன. இதனுடன், 30 நாள் திட்டமானது அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பின் இலவச டிரையல், இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Airtel Thanks-ன் நன்மைகளை வழங்குகிறது.

ALSO READ: அரண்டுபோன Airtel, Jio, Vi; BSNL புதிய அசத்தல் திட்டம் அறிமுகம்

சமீபத்தில், பாரதி ஏர்டெல் (Bharathi Airtel) வீடுகளுக்கான 'ஏர்டெல் பிளாக்' திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் ஆல் இன் ஒன் தீர்வாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ், ஒரு வாடிக்கையாளர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை (ஃபைபர், டி.டி.எச், மொபைல்) ஒன்றாக இணைத்து ஏர்டெல் பிளாக் என்ற பெயரில் அளிக்கப்படுகின்றது. இதில் இவை அனைத்துக்கும் சேர்த்து வாடிக்கையாளருக்கு ஒரே பில் அளிக்கப்படும். ஒரு வாடிக்கையாளர் பராமரிப்பு எண், உறவு மேலாளர்களர் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியவையும் இதில் ஒரே இடத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 

ஒரு வாடிக்கையாளர் இந்த சேவையை அழைத்த 60 விநாடிகளுக்குள் வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் இணைய முடியும். டி.டி.எச் கட்டணம் வசூலிக்கப்பட்ட சேவையாக வழங்கப்படுவதால், ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி டிவி பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு ஒரு முறை ஒரு பில்லை கட்டினால் போதும். 

ஏர்டெல் பிளாக் ஒரு எளிய அம்சத்தை வழங்குகிறது. இதில் பயனர்கள் ஒவ்வொரு சேவைக்கும் தங்களுக்கு பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

மிகக் குறைந்த திட்டம் மாதத்திற்கு ரூ .998 முதல் தொடங்கி இரண்டு மொபைல் இணைப்பு மற்றும் ஒரு டி.டி.எச் இணைப்பை வழங்குகிறது. மற்ற திட்டங்கள் மாதத்திற்கு ரூ .1,349, ரூ .1598 மற்றும் ரூ .2099 ஆகிய தொகைகளுக்கானவை.

ரூ .1,349 திட்டம் ஒரு மாதத்திற்கு மூன்று மொபைல் இணைப்புகள் மற்றும் ஒரு டி.டி.எச் இணைப்பை வழங்கும். ரூ .1,598 திட்டம் இரண்டு மொபைல் இணைப்புகள் மற்றும் ஒரு ஃபைபர் இணைப்பை அளிக்கும். ரூ .2,099 திட்டம் மூன்று மொபைல் இணைப்புகள், ஒரு ஃபைபர் இணைப்பு மற்றும் ஒரு டி.டி.எச் இணைப்பு ஆகியவற்றை வழங்கும்.

ALSO READ: BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: ஜியோ, ஏர்டெல்லுக்கு கடுமையான போட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News