தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் திருமணம் முடித்துக்கொண்ட இவர், ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் சினிமா என படு பிசியாக உள்ளார். பெரிய பெரிய கமிட்மண்டுகளுக்குள் இருக்கும் போதும் இவர் தன் உடல் மற்றும் சருமத்தையும் நன்றாக பாதுகாத்து வருகிறார். அது எப்படி..?
காஜல் அகர்வால்:
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தயாரிப்பாளர்கள்-இயக்குநர்களுக்கு படம் இயக்க வேண்டும் என்றால் முதலில் கதாநாயகியாக காஜல் அகர்வாலைத்தான் ஃபிக்ஸ் செய்வார்கள். காரணம் இவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும் பளிச்சென்ற கண்களும் பளிங்கு போன்ற சருமமும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சமீப காலமாக அவர் குடும்பத்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதால் அவர் அதிகமாக படங்களில் சைன் செய்வதில்லை. 38 வயதாகும் காஜலுக்கு சருமம் மட்டும் சாகா வரம் வாங்கியது போல இன்னும் இளமையாகவே உள்ளது. இவர் தனது உடலையும் மனதையும் சருமத்தையும் நலமுடன் பார்த்துக்கொள்வது எப்படி..? இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | வீட்டில் வைக்கக்கூடாத செடிகள்: வாஸ்து சொல்லும் இதை வீட்ல வைச்சா, நிலைமை மோசமாயிடும்
வீட்டிலேயே உருவாக்கிய மாஸ்க்:
சரும பராமரிப்பு என்று வந்துவிட்டால் காஜலுக்கு பிடித்தது வீட்டிலேயே உருவாக்கிய மாஸ்கை உபயோகிப்பதுதானாம். அதிலும், இதை எப்படி செய்ய வேண்டும் என அவரது அம்மாதான் அவருக்கு சொல்லிக்கொடுத்தாராம். இதை தன் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க காஜல் உபயோகிப்பாராம். இந்த மாஸ்க் செய்ய தேன், கொஞ்சமாக எலுமிச்சை சாறு, கொஞ்சம் தயிர் ஆகியவை தேவைப்படும். தயிரில் உள்ள ஹிடாக்ஸ்ரி அமிலம் மற்றும் ஜிங்க் ஆகியவை சருமத்தை மென்மையாக மாற்றவும், உள்ளிருந்து அழுக்கை நீக்கவும் உதவுமாம்.
பாதாம் பருப்பு ஸ்கர்ப்:
பொதுவாக, சருமத்தில் பதிந்துள்ள அழுக்குகளை நீக்க நாம் அனைவரும் ஸ்க்ரப் போன்ற க்ரீம்களை பயன்படுத்துவது முக்கியம். அதிலும் இயற்கையான ஸ்க்ரப்களை பயன்படுத்தினால் இன்னும் பலன் அதிகம். காஜல், அவ்வாறான இயற்கை ஸ்க்ரப்பைதான் உபயோகிக்கிறார். அவர், இதனை பாதாம் பருப்பை வைத்து உருவாக்குகிறார். இதற்கு பாதாம் பருப்பு மற்றும் கொஞ்சம் முந்திரி பருப்பு தேவை. இதில் பாதாம் பருப்பினை தோல் உரிக்காமல் முந்திரியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் நன்கு தேய்க்க வேண்டும். குறிப்பாக மூக்கு இடுக்குகள், உதடுகளுக்கு அருகில் மற்றும் நெற்றியில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்க உதவும்.
சருமத்தை சுத்தப்படுத்துதல்:
காஜல் தன் தலைக்கு மேல் வேலை இருந்தால் கூட, சரும பராமரிப்பிற்கு என சில மணித்துளிகளை ஒதுக்குவாராம். சருமத்தை சுத்தம் செய்தல் (Cleansing) டோனிங் மற்றும் மாய்ஸ்ட்ரைசிங் (ஈரப்பதமாக வைத்துக்கொள்ளுதல்) போன்ற விஷயங்களை இவர் செய்கிறாராம். தினசரி முகத்திற்கு மேக்-அப் போடுவதால் அவர் இதை தினமும் செய்வதாக கூறுகிறார். மேலும் வெயிலில் செல்வதற்கு முன்னர் சன்ஸ்க்ரீன் உபயோகிக்கவும் தவறாதவர் காஜல்.
முல்தானி மெட்டி:
காஜல் தேங்காய் எண்ணெய் அல்லது அதனுடன் தொடர்புடைய சில பொருட்களையும் தனது சரும பராமரிப்பிற்காக பயன்படுத்துகிறாராம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும் மேக்-அப்பை முகத்தில் இருந்து எடுக்கவும் அவர் இதை உபயோகிப்பதாக கூறுகிறார். அடிக்கடி முல்தானி மெட்டி ஃபேஸ் மாஸ்க் உபயோகிப்பது தன் முகத்திற்கு பொலிவு கொடுப்பதாக கருதுகிறார் காஜல் அகர்வால்.
உடற்பயிற்சி மற்றும் நீர்சத்து:
மேற்கூறிய ஸ்கின் கேர் விஷயங்கள் மட்டுமன்றி காஜல் அதற்காக நல்ல உடற்பயிற்சியையும் பேணுபவர். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் தன் மனதும் உடலும் மிகவும் புத்துணர்ச்சி அடைவதாக அவர் கூறுகிறார். மேலும், தன் உடலிலும் சருமத்திலும் நீர் சத்து குறையாமல் இருக்க இவர் அடிக்கடி தண்ணீர் பருகுவதும் வழக்கம். இது, உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் என அவர் கூறுகிறார்.
மேலும் படிக்க | உங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி துவைக்கவில்லையா? இந்த வித தொற்றுகள் ஏற்படலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ