நாம் அனைவரும் அழகாகவும், ஒளிரும் சருமத்துடனும் இருக்க தான் ஆசைப் படுவோம். ஆனால் மாறிவரும் பருநிலை காரணமாக முகத்தில் பல்வேறு மாற்றங்களை நாம் தெளிவாக காணலாம். இதன் காரணமாக, வறண்டு சருமம், உயிரற்ற சருமத்தை பெறுகிறோம். எனினும் நாம் அனைவரும் எப்போதுமே ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சாருமத்தையே பெற விரும்புகிறோம், இதற்காக நாம் பல்வேறு வீட்டு வைத்தியங்களையும் முயற்சித்தும் வருகிறோம். ஆனால் அழகு பராமரிப்பு என்று வரும்போது, ஆயுர்வேத வைத்தியம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த ஆயுர்வேத வைத்தியm பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த வித பக்க விளைவுயும் ஏற்படலாமல் பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. அப்படிப்பட்ட 5 ஆயுர்வேத வைத்தியம் எனவென்று இந்த பதிவில் காண்போம்.
சருமத்திற்கு மஞ்சள்:
மஞ்சளில் ஆயுவேத பண்புகள் ஏராளம். இதை அழகு துறையிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினி பண்புகள் பல சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. மேலும் மஞ்சள் சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கி தோல் நிறத்தை ஒளிர செய்கிறது. இதை பயன்படுத்த முதலில் எப்படி தயிர் 2 டீஸ்பூன் எடுத்து அதில் சிட்டிகை மஞ்சளை கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு முகத்தையும் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் 3 அல்லது 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | அருவெறுப்பான மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்கனுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்
சருமத்திற்கு சோற்றுக்கற்றாழை:
சோற்றுக்கற்றாழை ஒரு சக்தி வாய்ந்த மாய்சுரைசர் ஆகும். சோற்றுக்கற்றாழை சருமம் முதல் கூந்தல் வரை செய்யப்படும் பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி சோற்றுக்கற்றாழை கூந்தலின் வறட்சியை போக்க பெரிய அளவில் உதவுகிறது. அதேபோல் சோற்றுக்கற்றாழை தீக்காயங்கள் மற்றும் வெடிப்புகளை குணப்படுத்தவும் உதவும். இது சருமத்தில் பயன்படுத்தினால் இறந்த செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக்க உதவும். இதை பயன்படுத்த முதலில் சோற்றுக்கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்யவும்.
சருமத்திற்கு ரோஜா இதழ்கள்:
பழங்காலம் முதலே அழகுக்காகவும் வாசனைக்காகவும் ரோஜா இதழ்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சருமத்தின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ மற்றும் பி3 உள்ளது. இது கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் கொண்டுள்ளன. ரோஜா இதழ்களை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த முதலில் ரோஜா இதழ்களை பாலில் ஊறவைத்து அதை பேஸ்ட் வடிவில் அரைத்துக் கொண்டு பின்பு சருமத்தில் போட்டு 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவை சரும வறட்சியை நீக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரு வாரத்தில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ