உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்களா? இனிமேல் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். மனைவிக்கு பணம் கொடுத்தால் அது குற்றமா என்று தோன்றுகிறதா?
உண்மையில் வருமான வரிச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவாக உங்கள் மனைவியின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால் அது தவறல்ல. ஆனால் சில சூழ்நிலைகளில் அது மனைவியின் வருமானமாகக் காட்டத் தொடங்கிவிடும். அது வரி செலுத்த வேண்டிய வருமானமாக மாறிவிடும். ஏற்கனவே உங்களுடைய வருமானத்திற்கு வரி (Income Tax) கட்டியிருக்கும் நிலையில், மீண்டும் வரி கட்ட வேண்டியிருக்கும் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறதா?
இது குறித்து வரி வல்லுநர்கள் (Tax Experts) என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
புதுடெல்லி: கொரோனா (Corona Virus) சகாப்தம் மக்களை டிஜிட்டல் உலகிற்கு மாற்றிவிட்டது. லுடன் பெரிய அளவில் இணைத்துள்ளது. குறிப்பாக இப்போது அன்றாட தேவைக்கான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போக்கு அதிகரித்துவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங் செய்வதர்கு பணத்தை டிஜிட்டலில் செலுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவுகளுக்கான பணத்தை உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினால், மனைவிக்கு வருமான வரி அறிவிப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
பின்னர் நீங்கள் வரி செலுத்த வேண்டும்
ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவுகளுக்காக மனைவியின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வருமான வரிக்கு மனைவி பொறுப்பேற்க மாட்டார் என்று வரி வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு வகையான பணமும் கணவரின் வருமானமாக மட்டுமே கருதப்படும். இதற்கு மனைவி எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
எளிமையான மொழியில் சொல்வது என்றால், இந்த தொகைக்கு மனைவிக்கு வருமான வரித் துறையிலிருந்து எந்த அறிவிப்பும் கிடைக்காது. ஆனால், மனைவியின் கணக்கில் போட்ட பணத்தை அவர் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் ஈட்டினால், அந்த வருமானத்திற்கு வரி கட்ட வேண்டியிருக்கும் (Taxable Income) என்று வரித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | ஆன்லைனில் Aadhaar Card தகவல்களை எவ்வாறு மாற்றுவது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR