Army, Navy-யில் உள்ள வீரர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அளிக்கிறது இந்த வங்கி

இராணுவ சம்பள தொகுப்பின் கீழ், இந்திய ஆயுதப்படைகளில் தற்போதுள்ள மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு வங்கி சேவைகள் வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2020, 03:24 PM IST
  • பாங்க் ஆப் பரோடா இந்திய கடற்படை வீரர்களுக்காக சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது.
  • இந்திய கடலோர காவல்படையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வங்கி கையெழுத்திட்டுள்ளது.
  • குழந்தைகளின் படிப்பு முதல் திருமணம் வரை வீரர்களுக்கு வங்கி உதவியாக இருக்கும்.
Army, Navy-யில் உள்ள வீரர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அளிக்கிறது இந்த வங்கி title=

பாங்க் ஆப் பரோடா இந்திய கடற்படை வீரர்களுக்காக சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த பி.எஸ்.யூ வங்கி கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் கீழ், கணக்கு வைத்திருக்கும் இந்த வீரர்களுக்கு வங்கி பல வசதிகளையும் சிறப்பு சேவைகளையும் வழங்கும். வங்கி இந்திய இராணுவத்துடனும் (Indian Army) தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.

பரோடா இராணுவ சம்பள தொகுப்பு

இதன் கீழ், வங்கி தனது புதிய சேவையான பரோடா இராணுவ சம்பள தொகுப்புடன் (Baroda Military Salary Package) சிறப்பு வங்கி சேவைகளை வழங்கும். Bank of Baroda-வின் படி, பரோடா இராணுவ சம்பள தொகுப்பின் கீழ், இந்திய ஆயுதப்படைகளில் தற்போதுள்ள மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு வங்கி சேவைகள் வழங்கப்படும். வங்கி அதன் 8,200 உள்நாட்டு கிளைகள் மூலமாகவும் சுமார் 20,000 வங்கி நண்பர்கள் மூலமாகவும் இந்த சேவைகளை ராணுவ வீரர்களுக்கு கொண்டு செல்லும்.

ALSO READ: இந்த வங்கியில் Door step banking வசதி துவக்கம்: இத்தனை நன்மைகளைப் பெறலாம்

சம்பளக் கணக்கின் நன்மைகள்

இந்த ஒப்பந்தத்தில் டைரக்டர் ஜெனரல் (எம்.பி & பி.எஸ்) லெப்டினென்ட் ஜெனரல் ரவீன் கோஸ்லா மற்றும் பாங்க் ஆப் பரோடா நிர்வாக இயக்குநர் விக்ரமாதித்யா சிங் கிச்சி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த தொகுப்பின் கீழ் பல நன்மைகள் உள்ளன என்று Bank of Baroda-வின் நிர்வாக இயக்குனர் விக்ரமாதித்ய சிங் கிச்சி கூறினார்.

படிப்பு முதல் திருமணம் வரை கவனிப்பு

-ராணுவ வீரர்களுக்கு தனியார் விபத்து காப்பீடு

-நிரந்தரமாக உடல் ஊடமுற்றால் அதற்கு காப்பீட்டுத் தொகை

-உடலில் பகுதி இயலாமைக்கான காப்பீட்டு பாதுகாப்பு

-விமான விபத்து காப்பீடு மற்றும்

-ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இறந்தால் அவர்களது குழந்தைகளுக்கான உயர் கல்வி காப்பீடு

-பெண் குழந்தைகளின் திருமணத்திற்கான காப்பீடு போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் இருக்கும்.

இந்த நன்மைகளும் கிடைக்கும்

இது தவிர, அனைத்து வங்கி ATM-களிலும் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகள், சில்லறை கடன்களில் சேவை வரி விலக்கு, RTGS / NEFT மூலம் இலவச பரிமாற்ற வசதி, இலவச கோரிக்கை வரைவு, வங்கியாளர் காசோலை, லாக்கர் வாடகைகளில் கணிசமான தள்ளுபடி போன்ற பிற நன்மைகளும் இருக்கும்.

ALSO READ: Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI: முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News