ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஜனவரி 2023 மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலின்படி, ஆன்லைன் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும், ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் விடுமுறைகள் சில வங்கிகளுக்கு பொருந்தினாலும், உள்ளூர் விடுமுறை காரணமாக சில வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி தொடர்பான வேலைகள் மக்களுக்கு இருப்பதால் ஜனவரி மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தெரிந்துகொண்டால் அவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்காது. அதன்படி நாடு முழுவதும் ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி மாதம் கொஞ்சம் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் அடங்கும். அதுபோலவே புத்தாண்டு, பொங்கல், குடியரசுத் தினம் உள்ளிட்ட நாட்களும் அதில் வருகின்றன.
ஜனவரி 2023 வங்கி விடுமுறை நாட்கள்:
ஜனவரி 2 - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை
ஜனவரி 3 - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 4 - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை
ஜனவரி 12 - மேற்கு வங்கத்தில் விடுமுறை (விவேகானந்தரின் பிறந்தநாள்)
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - உழவர் திருநாள்
ஜனவரி 23 - மேற்கு வங்கத்தில் விடுமுறை (நேதாஜி பிறந்தநாள்)
ஜனவரி 26 - குடியரசு தினம்
சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள்:
ஜனவரி 1 - புத்தாண்டு/ ஞாயிறு
ஜனவரி 8 - ஞாயிறு
ஜனவரி 14 - இரண்டாவது சனி
ஜனவரி 15 - ஞாயிறு
ஜனவரி 22 - ஞாயிறு
ஜனவரி 28 - நான்காவது சனிக் கிழமை
ஜனவரி 29 - ஞாயிறு
மேற்கண்ட நாள்களில் வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ