பஜாஜ் ஆட்டோ நிறுவனம் என்எஸ்125 பல்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 93,690, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் என்எஸ் சீரிசில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். பஜாஜ் என்எஸ்125 மாடல் - பீச் புளூ, பியெரி ஆரஞ்சு, பர்ன்ட் ரெட் மற்றும் பியூட்டர் கிரே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
மறுபுறம் கேடிஎம் (KTM) நிறுவனம் 2021 டியூக் 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியூக் (Duke) 125 மாடல் விலை ரூ. 1.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
ALSO READ | Bajaj Chetak: நம்ப முடியாத விலை, அதிரடி அம்சங்களுடன் அசத்தும் Electric scooter
பஜாஜ் (Bajaj) என்எஸ்125 மாடல் தோற்றத்தில் என்எஸ்160 மற்றும் என்எஸ்200 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 12 லிட்டர் பியூவல் டேன்க், ட்வின் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்போர்ட் அம்சங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய என்எஸ்125 மாடலில் 124சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 12 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 144 கிலோ எடை கொண்டுள்ளது.
அதேசமயம் 2021 125 டியூக் மோட்டார்சைக்கிளில் புதிதாக ஸ்ப்லிட் ரக டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கை முன்பை விட சவுகரியமாக வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 125 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.3 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டபிள்யூபி யுஎஸ்டி போர்க்குகள், மோனோஷாக், இருசக்கரங்களில் ஒற்றை டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR