மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2 தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கூடிய அதிசய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2 தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கூடிய அதிசய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தின் கஞ்ச்பசோடா பகுதியில் உள்ள கிராமமொன்றில் வசிப்பவர் பபிதா அஹிர்வார். இவரது கணவர் ஜஸ்வந்த் அஹிர்வார். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பபிதா பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 3.3 கிலோ எடை கொண்ட, 2 இணைந்த தலைகள் மற்றும் மூன்று கைகளைக் கொண்ட குழந்தையை பபிதா அஹிர்வார் சனிக்கிழமை பிரசவித்துள்ளார். இத்தகவலை விடிஷா மாவட்ட மருத்துவமனை சிவில் சர்ஜன் சஞ்சய் கரே தெரிவித்தார்.
இந்த குழந்தை பிறந்த உடனேயே, குழந்தை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வைக்கப்பட்டதாக அந்த பெண்ணின் கணவர் ஜஸ்வந்த் அஹிர்வார் தெரிவித்தார். ஆனாலும் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக போபாலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே இது குறித்து கருத்து கூறியுள்ள மருத்துவர்கள் வயிற்றில் உள்ள கரு சரியாக வளர்ச்சியடையாத போது தான், இது போன்ற குழந்தைகள் பிறக்கின்றன. இத்தகைய குழந்தைகள் உயிர் பிழைத்து இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது என கூறியுள்ளனர்.