இன்றைய காலத்து குழந்தைகள் மிகவும் பிடிவாத குணத்துடன் வருகின்றனர். இதற்காக குழந்தைகளை அடித்து வளர்த்தால் இன்னும் அவர்கள் கெட்டுப்போகத்தான் வாய்ப்பு அதிகமே தவிர சரி செய்ய முடியாது. குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க கத்தி பேசியோ அல்லது அடித்தோ வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அவர்களுக்கு சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். எந்த ஒரு விளையாட்டிலும் டைம் அவுட் என்ற வார்த்தையை கேட்டு இருப்போம். அதே போல வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை மேம்படுத்தவும் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், டைம் அவுட் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளைப் பற்றி பேசினால், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் சிறிது நேரம் நிறுத்தப்படுகின்றன.
மேலும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகிவிட்டீர்களா? இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்!
வெளிநாடுகளில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தாலோ, பிடிவாதமாக நடந்து கொண்டாலோ அல்லது பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. பல நேரங்களில் குழந்தைகள் சில பெரிய தவறுகளை கூட தெரியாமல் செய்து விடுகின்றனர். இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் அவர்களுக்கு நேரம் கொடுக்கிறார்கள். இந்த முறை வெளிநாடுகளில் இருக்கும் பொதுவான நடைமுறை ஆகும். இருப்பினும், தற்போது இந்தியாவிலும் கூட இதே போன்ற நடைமுறை உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
டைம் அவுட் என்றால் என்ன?
2 வயது முதல் 6 வயது வரை உள்ள சிறு குழந்தைகளுக்கு அவர்கள் செய்யும் தப்பை திருத்தவோ அல்லது அவர்களின் தவறை விளக்கவோ கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு நடத்தை மாற்ற நடவடிக்கையாகும், இதில் குழந்தைகள் அவர்கள் செய்யும் தவறுகளை திருத்த அல்லது புரிய வைக்க முயற்சி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து குழந்தையைத் தண்டிக்க நேரத்தைப் செலவழிப்பது தவறு. குழந்தைகள் தவறாக நடந்து கொண்டாலோ, பெற்றோர் செல்பேச்சை கேட்காவில்லை என்றாலோ அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். அதாவது உடனே கண்டிக்காமல் இரண்டு அல்லது மூன்று முறை சரி செய்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு பெற்றோர்கள் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் பெற்றோர்களை பார்த்து தான் வளர்கிறார்கள். அமைதியாக இருக்க கற்று கொடுங்கள். சோபாவில் உட்கார சொல்லி கொடுங்கள். அவர்கள் செய்யும் தவறை அவர்களே புரிந்து கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும். குழந்தையுடன் நீங்கள் இருக்கும் போது அருகில் பொம்மைகள், டிவி அல்லது குழந்தைகளை கவர கூடிய பொருட்களை வைத்து கொள்ளாதீர்கள். இது அவர்களது கவனத்தை திசை திருப்பும். குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை கத்தவோ அடிக்கவோ தேவையில்லை. அந்த சமயத்தில் நேரத்தில் குழந்தையுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வேண்டாம்.
மேலும் படிக்க | வெளிநாடு சுற்றுலா... ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல... அதிகம் செலவாகாது..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ