Astro: நளபாக சமையலால் அனைவர் மனதையும் வெல்லும் ‘3’ ராசிக்காரர்கள்..!!

மக்கள் மனதையும் வெல்லும் சிறப்பு குணம் சிலருக்கு இருக்கும். சிலர் தனது வார்த்தைகளால் மனதைக் கவர்ந்தால், சிலர் தனது ஆளுமையினால் கவர்கின்றனர்.  சிலர் தனது அற்புத சமையல் கலையினால் மனதை வெல்கின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2022, 12:30 PM IST
  • மக்கள் மனதையும் வெல்லும் சிறப்பு குணம் சிலருக்கு இருக்கும்.
  • சிலர் தனது வார்த்தைகளால் மனதைக் கவர்கின்றனர்.
  • சிலர் தனது ஆளுமையினால் ஈர்க்கின்றனர்.
Astro: நளபாக சமையலால் அனைவர் மனதையும் வெல்லும் ‘3’ ராசிக்காரர்கள்..!! title=

ஒவ்வொரு ராசிக்காரர்களின் பண்புகள், திறன்கள், குணநலன்கள் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பண்புகள் அவர்களின் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

எல்லோருடைய மனதையும் வெல்லும் சிறப்பு குணம் சிலருக்கு இருக்கும். சிலர் தனது வார்த்தைகளால் மனதைக் கவர்ந்தால், சிலர் தனது ஆளுமையினால் கவர்கின்றனர்.  சிலர் தனது அற்புத சமையல் கலையினால் மனதை வெல்கின்றனர். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி 3 ராசிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் நளபாகம் போன்று சிறப்பாக சமைப்பதோடு மட்டுமின்றி, சமைத்த சுவையான உணவை பரிமாறுவதிலும் சிறந்தவர்கள். அறுசுவை உணவை அளித்து மக்களின் மனதை எளிதில் வெல்வார்கள்.

மேலும் படிக்க | அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்ட மழை: தொட்டது துலங்கும் 

சமையலில் வல்ல ராசிக்காரர்கள் 

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சமைப்பது, பரிமாறுவது, சாப்பிடுவது ஆகிய மூன்றையும் மிகவும் விரும்பி செய்வார்கள். சமையலறையை மிகவும் ரசிக்கிறார்கள் என்று சொல்லலாம். அவர்கள் புதிய உணவுகளை முயற்சிக்க விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவை பரிமாறுவதன் மூலம் அவர்களின் கோபத்தை எளிதில் சாந்தப்படுத்துவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் என்பதோடு ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், என்ராலும், மிகவும் புத்திசாலிகள். இவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். சமையல் திறன் மூலம் மக்கள் மனதை எளிதில் வெல்வார்கள். இவர்கள் சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்  என்பதோடு, மிகவும் அன்புடன் உணவு பரிமாறும் உள்ளதால், அனைவரும் இவர்களை பெரிதும் வெல்வார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களும் சமையலில் வல்லவர்கள். இவர்கள் அமைதியான மற்றும் சீரான வாழ்க்கையை விரும்புகிறார்கள். கொஞ்சம்  மனஅழுத்தம் ஏற்பட்டால் கூட, சமைப்பதன் மூலம் மன அழுத்தத்தை pஓக்கி விடுவார்கள். சமையலில் ஈடுபடும் போது இவர்களுக்கு, சகல துக்கங்களும் மறந்து விடும் எனலாம்.  சமைக்கும் வேலையை இவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். இவர்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை எப்படி செய்வது என்பதை மிக விரைவாகக் கற்றுக்கொள்கின்றனர்.

மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது, அடிக்கும் ஜாக்பாட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News