முடி பராமரிப்பு குறிப்புகள்: பூக்கள் மற்றும் இலைகள் முடி பராமரிப்பில் சிறந்த விளைவைக் காட்டுகின்றன. வேப்ப இலைகள், துளசி இலைகள் மற்றும் சீகைக்காய் மற்றும் ரீத்தா போன்ற மூலிகைகளும் முடியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், செம்பருத்திப் பூவும் முடியில் அற்புதமான விளைவைக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், செம்பருத்தி பூ கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இது குறிப்பாக மெல்லிய முடி பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இந்தப் பூக்களைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து முடியை பாதுகாக்கிறது. அதேபோல் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதில் இதன் தாக்கம் தெரியும் மற்றும் செம்பருத்திப் பூக்கள் பொடுகை போக்கவும் நன்மை பயக்கும். எனவே கூந்தல் பராமரிப்பில் இந்தப் பூக்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை முடியில் எவ்வாறு தடவலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
முடி வளர்ச்சிக்கு செம்பருத்திப் பூ | Hibiscus Flower For Hair Growth
செம்பருத்தி ஹேர் மாஸ்க்
செம்பருத்தி ஹேர் மாஸ்க் (Hibiscus Hair Mask) முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஹேர் மாஸ்க் தயார் செய்ய, முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை சம அளவு கலந்து அரைக்கவும். இந்த பேஸ்ட்டை தலையில் உள்ள முடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசவும். இந்த பேஸ்ட்டை வாரம் இருமுறை தலையில் தடவுவது முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | 40 வயதானாலும் இளமையாக இருப்பது எப்படி..? ‘இந்த’ 5 விஷயங்களை செய்யுங்கள் போதும்..!
செம்பருத்தி எண்ணெய்
செம்பருத்தி எண்ணெயைத் தயாரித்து தலைமுடியில் தடவ, 8 முதல் 10 செம்பருத்தி இலைகள் மற்றும் சம அளவு செம்பருத்திப் பூக்களை எடுத்துக் கொள்ளவும். அவற்றை ஒன்றாகக் கலந்து, அரைத்து, கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இப்போது இதை சூடாக்கவும், அதனுடன் செம்பருத்தி விழுது சேர்த்து சமைக்கவும். எண்ணெய் கொதித்ததும், ஒரு பாட்டிலில் நிரப்பி, அதை உங்கள் விரல்களில் எடுத்து, இந்த எண்ணெயைக் கொண்டு தலையின் வேர்களை நன்கு மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலை முடியை கழுவவும்.
செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் மாஸ்க்
நெல்லிக்காய் கூந்தலுக்கு அதியங்களை செய்யும், அத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காயையும் செம்பருத்தியையும் ஒன்றாகப் பயன்படுத்துவது முடியில் அற்புதமான விளைவை அளிக்க உதவுகிறது. எனவே இப்போது செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் ஹேர் மாஸ்க் தயார் செய்ய, செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை சம அளவு கலந்து அரை நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளவும். உலர்ந்த நெல்லிக்காயையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து அரைக்கவும். உங்கள் ஹேர் மாஸ்க் தயார். 45 முதல் 50 நிமிடங்கள் முடியில் தடவி பின்னர் கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை வேகமாக குறைய..சாப்பிட்ட பிறகு ‘இதை’ செய்தால் போதும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ