கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வொர்க் ஃப்ரம் ஹோம் அதாவது வீட்டில் இருந்து கொண்டே அலுவலக பணியை மேற்கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பல இடங்களில் வர்த்தக நடவடிக்கை தொடங்கி விட்டாலும், பல அலுவலகங்களில் இது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது.
Work From Home பல வகைகளில் வசதியானது போல் தோன்றினாலும், அது உடல் மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை நம் வாழ்க்கையை நரகமாக்கலாம். மேலும் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வழிகளில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.
கொரோனா தொற்று (Corona virus) பரவலை தவிர்க்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு அற்புதமான மாற்றாகும். இதில் சந்தேகம் ஏதும் இல்லை. இதனால், வீட்டில் இருந்து கொண்டே, நமது பணிகளை எளிதாக நிறைவேற்ற முடிகிறது. இது இதன் சிறப்பு.
ஆனால், அதே சமயத்தில் இதனால், பல பாதிப்புகளும் உள்ளன. இங்கே நாம் வொர்க் ஃபரம் ஹோம் தொடர்புடைய சில பழக்கங்களினால் ஏற்படும் முக்கியமான 5 பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. காலையில் விழித்தவுடன் லாப்டாப்பை ஆன் செய்வது
உங்கள் தூக்கத்தின் போதும், நீங்கள் வேலையைப் பற்றி சிந்திக்கும்போது இது பெரும்பாலும் நிகழ்கிறது. சிலர் தங்கள் வேலை நேரம் தொடங்கும் வரை தூங்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் தூங்கி எழுந்தவுடன், Laptop-ஐ ஆன் செய்கிறார்கள். இந்த பழக்கம் உங்கள் கண்களை பெரிதும் பாதிக்கும். தூங்கி எழுந்த உடன் கண்களின் லாடாப்பின் நீல ஒளி கண்ணில் படுவது உங்கள் கண்பார்வையை பாதிப்பதோடு, மன அழுத்தமும் ஏற்படும்.
ALSO READ | கொரோனா காலத்தில் வேலை இழப்பு, சம்பள குறைப்பு அதிகம் இருந்ததா.. உண்மை என்ன..!!
2. படுத்துக் கொண்டே வேலை செய்வது
முதுகுவலி ஏற்பட இது மிக முக்கிய காரணம். படுக்கையில் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பல மணிநேரம் வேலை செய்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கமாகும். படுக்கையில் பல மணி நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் செயல்திறனையும் பாதிக்கிறது. இது உங்களை மிகவும் சோம்பேறியாக ஆக்குகிறது. இதனால், உங்களால், 100 % செயல் திறனை கொடுக்க இயலாது.
3. நாள் முழுவதும் வேலையில் ஈடுபடுதல்
சிலர் நாள் முழுவதும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக வலை தளங்களை பார்த்துக் கொண்டு, அலுவலகம் நிமித்தமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருப்பார்கள். இந்த பழக்கம் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேலை முக்கியம் தான், ஆனால் வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பது, உங்கள் குடும்பத்திலிருந்தும் உங்களை விலக்கி விடும்.
4, வேலைக்கு நடுவில் ப்ரேக் எடுத்து கொள்ளாமல் இருத்தல்
உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், செயல் திறன் அதிகரிக்கவும், வேலைக்கு நடுவில் ப்ரேக் எடுத்துக் கொள்வது முக்கியம். வீட்டில் இருப்பதே ஒரு ப்ரேக் தான் என்று நினைக்க வேண்டாம். அது அப்படி அல்ல. நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருப்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
5. அழைப்புகளை தவற விட்டு விடிவோமோ என்ற பயம் மற்றும் கவலை
முக்கிமான தொலைபேசி அழைப்புகளை தவற விட்டுவிடுவோமோ என்ற பயம் ஒரு கட்டத்திற்குப் பிறகு உங்களை பைத்தியமாக்கி விடும். அலுவலக விஷயங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியம், ஆனால் எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என முயற்சிப்பது மற்றும் வேலையில் அதிகமாக ஈடுபடுவது உங்கள் மனநிலையை பெரிதும் பாதிக்கும். எனவே, உங்கள் உடல்நலம் பாதிக்காத வகையில் திட்டமிட்டு வேலை செய்யவும்,
ALSO READ | உணவே மருந்து: மழை, குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR