இந்தியா முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பானமாக டீ உள்ளது. காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் அன்றைய தினம் சிலருக்கு சிறப்பாக இருக்கும். ஒரு நாளைக்கு 10 டீ குடிக்கும் பலரும் உள்ளனர். டீ குடிப்பது உடலுக்கு கெடுதல் என்றாலும் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. பலருக்கும் டீயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட பிடிக்கும். பஜ்ஜி முதல், சமோசா, வடை, பப்ஸ் என டீயுடன் பல சிற்றுண்டி உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இவை டீயின் சுவையை அதிகப்படுத்தினாலும் உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் டீயின் நன்மையை குறைத்து, அதன் சுவையை மாற்றி உடலுக்கு தீங்காக மாறுகிறது. எனவே டீயுடன் எந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்
டீயுடன் சாப்பிட கூடாத உணவுகள்
சிட்ரஸ் பழங்கள்: பொதுவாக லெமன் டீ குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அதே வேளையில் அதிகமான அளவு சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வது செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சிட்ரஸ் பழத்தில் அதிக அமிலத்தன்மை உள்ளது. எனவே டீ குடிக்கும் போது இந்த பழங்களை எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த காம்போ செரிமான மண்டலத்தை எரிச்சலடையச் செய்யும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்: டீயுடன் அதிக சத்துள்ள கீரை, மட்டன், பருப்பு வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. இரும்புசத்து உடலுக்கு அவசியம் என்றாலும், டீயுடன் இவற்றை சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு இரும்பு உறிஞ்சுவது தடுக்கப்படும். இந்த பிரச்சனைகள் வரமால் இருக்க டீ குடித்த சில நேரங்களுக்கு பிறகு இந்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
காரமான உணவுகள்: டீயுடன் காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது இரைப்பை குடல் அசௌகரியத்தை அதிகப்படுத்தும். டீயுடன் காரணமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது வயிற்று அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை அதிகரிக்க செய்யும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இவை டீ குடிப்பதன் நோக்கத்தை தடை செய்யும். இந்த உணவுகளின் அதிக சர்க்கரை உள்ளதால் வளர்சிதை மாற்றம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
குளிர்ந்த உணவுகள்: பொதுவாகவே கூலிங்கான உணவுகளை சூடான உணவுகளுடன் எடுத்து கொள்ள கூடாது. இரண்டும் மாறுபட்ட வெப்பநிலையில் இருப்பதால் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் செரிமான அமைப்பை சீர்குலைத்து, குமட்டலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே சூடாகவோ அல்லது குளிச்சியாகவோ சாப்பிட பிறகு இந்த உணவுகளை தவிருங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ