இளநீர் முதல் காபி வரை...! இந்த உணவுகள் சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!

உடலுக்கு நல்லது என்று நினைத்து நாம் தினசரி சாப்பிடும் சில உணவுகள் உண்மையில் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.  அவற்றை முற்றிலும் அகற்றுவது நல்லது.  

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2023, 06:28 AM IST
  • உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
  • இதய நோய்களை அதிகம் ஏற்படுத்துகிறது.
  • தரமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
இளநீர் முதல் காபி வரை...! இந்த உணவுகள் சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்!  title=

உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க முக்கியமானவை.  இன்றைய உலகில் உணவு பழக்கவழக்கம் பலரது வாழ்வை மாற்றுகிறது.  சரியான நேரத்தில் சரியான உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பது ஆபத்தில் முடிகிறது. நாம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கும் பல உணவுகள் உண்மையில் கெடுதலை ஏற்படுத்துகின்றன.  இந்த குழப்பங்களை தவிர்க்க சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு நன்மைபயக்கும் என்று நாம் நினைக்கும் எந்த சில உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

காபி: காபி உலகம் முழுவதும் பலரால் விரும்பப்படும் பானமாகும். சிலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால் மட்டுமே அடுத்த வேலை நடக்கும்.  அதிகப்படியான காபி குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து, தலைவலி, மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  இது சில நேரங்களில் இதயத்தையும் பாதிக்கலாம்.

பிரட்: நாம் அவசரமாக வேலைக்கு செல்லும் போது காலை உணவாக பிரட்டை சாப்பிடுகிறோம்.  சமைப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த பிரட் வகைகள் பலருக்கும் விருப்பமாகவும் உள்ளது.  பிரட்டை ஜாம் அல்லது சீஸ் வைத்து சாப்பிடலாம்,  ஆனால் தினசரி பிரட்டை சாப்பிடுவது பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிரட்டை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருப்பதற்காக அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானமும் பாதிக்கப்படுகிறது.

பான் கேக்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பான் கேக்கை விரும்பி சாப்பிடுகின்றனர்.  ஆனால் இதில் நிறைய ஆபத்தும் உள்ளது.  முடிந்தவரை இவற்றை குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. இதில் நிறைய கொழுப்பு உள்ளது, இது உங்களுக்கு உடல் எடையை அதிகப்படுத்துவது மட்டும் இல்லாமல், இதயத்திற்கும் ஆபத்தை தருகிறது.

பீனட் பட்டர்: இந்த வகை உணவுகள் உடலுக்கு சில நன்மைகளை அளித்தாலும், அதை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஆபத்தானவை. அதே சமயம், இவற்றை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இது கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கிறது.

இளநீர்: பொதுவாக எந்த தீங்கும் விளைவிக்காத இயற்கை பானமாக இளநீர் கருதப்படுகிறது.  இளநீரில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாக குடிப்பதால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம், இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றுவலி ஏற்படுகிறது.

டயட் கோக்: பொதுவாக விற்கப்படும் கோக் அல்லது பெப்சி பானங்களில் அதிக சர்க்கரை, இனிப்பு கலவை இருப்பதால், தற்போது நிறைய பேர் டயட் கோக் விரும்பி சாப்பிடுகிறார்கள். டயட் கோக்குகள் சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்திற்கு பல தீங்குகளை விளைவிப்பதோடு உங்கள் பற்களுக்கும் பலவீனத்தை அளிக்கிறது. இது தவிர, இதய நோய், மன அழுத்தம் உள்ளிட்ட கடுமையான நோய்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

சிவப்பு இறைச்சி: பன்றி இறைச்சி, ஆட்டுகறி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சியாக கூறப்படுகிறது.  பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் உட்கொள்ளும் போது பெருங்குடல் புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிக்கிறது. இது ஒரு வகை குடல் புற்றுநோயாகும். உப்பிடுதல் அல்லது கெட்டுப்போகாமல் இருக்க சில பொருட்களை இதில் சேர்ப்பதால் உடலுக்கு பலவித நோய்களை தருகிறது.

மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News