புதுடில்லி: ஆதார் மற்றும் பி.எஃப் கணக்கு இணைத்தல் தொடர்பான, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் புதிய விதிகள் இன்று ஜூன் 1,2021 முதல் அமலுக்கு வருகின்றன. பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய விதியைக் கடைப்பிடிக்கத் தவறினால், அதனால், அவர்கள் ஈபிஎஃப் (EPF) பங்களிப்பில் பெரும் தாக்கம் ஏற்படக் கூடும்.
பி.எப் கணக்கை ஆதார் உடன் இணைத்தல்
புதிய ஈ.பி.எஃப்.ஓ விதிப்படி, பி எப் கணக்கு வைத்திருப்பவர் அனைவரும் தனது பி.எஃப் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். ஊழியர்களின் பி.எஃப் கணக்கை சரிபார்க்கப்பட்டுள்ளதாக என்பதை கவனிப்பது வேலையில் அமர்த்தியவரின் பொறுப்பாகும். ஜூன் 1 க்குள், ஊழியர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் - பி.எஃப் கணக்கில் நிறிவன செலுத்து பிஎப் பங்களிப்பும் நிறுத்தப்படலாம். இதுதொடர்பான அறிவிப்பையும் ஈ.பி.எஃப்.ஓ (EPFO) வெளியிட்டுள்ளது.
புதிய விதி கூறுவது என்ன?
சமூக பாதுகாப்பு நெறிமுறைகள் 2020 என்னும் சட்டத்தின் பிரிவு 142 விதியின் கீழ் புதிய விதிகளை ஈபிஎஃப்ஒ நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜூன் 1 முதல், பிஎஃப் கணக்கு ஆதார் அல்லது UAN உடன் இணைக்கப்படாவிட்டால், ஆதார் சரிபார்க்கப்படாவிட்டால், அதன் ஈசிஆர் - மின்னணு ரசீது மற்றும் தாக்கல் செய்யப்படாது.
இதன் பொருள், ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு பங்களிப்பைக் செலுத்த முடியும் என்றாலும், அவர்களால் முதலாளிகள் செலுத்தும் பங்கைப் பெற முடியாது.
ALSO READ | புதிய ஐடி விதிகளை கடைபிடிக்காமல் முரண்டு பிடிக்கும் ட்விட்டர்; அடுத்தது என்ன
ஈபிஎஃப் (EPF) கணக்கை ஆதார் உடன் இணைப்பது எப்படி
ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் உங்கள் ஈபிஎஃப் கணக்கில் உள்நுழைக
“நிர்வகி” ( “Manage”) பிரிவில் உள்ள “KYC” விருப்பத்தை கிளிக் செய்யவும்
நீங்கள் யுஏஎனுடன் (UAN) இணைக்க விரும்பும் விவரங்களை (பான், வங்கி கணக்கு, ஆதார் போன்றவை) தேர்ந்தெடுக்கலாம்
தேவையான விபரங்களை நிரப்பவும்
இப்போது “சேமி” (“Save”) விருப்பத்தை சொடுக்கவும்
உங்கள் ஆதார் - பிஎப் கணக்கு இணைக்கப்பட்டு விடும்.
ALSO READ | அடுத்த ஆறு நாட்களுக்கு வருமான வரி தாக்கல் இணையதளம் இயங்காது: எச்சரிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR