7th Pay Commission: மார்ச் 31-க்குள் இதை செய்தால் ஊதியத்தில் இந்த தொகையும் கூடும்

CEA Claim: கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) பெற முடியாத அனைத்து ஊழியர்களும், 31 மார்ச் 2022 க்கு முன் இதற்கான தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2022, 08:42 AM IST
  • ஊழியர்களுக்கு மேலும் ஒரு கொடுப்பனவு கிடைக்கும்.
  • கொரோனா காரணமாக பணியாளர்களால் CEA-ஐ கோர முடியவில்லை.
  • மார்ச் 31 க்கு முன் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
7th Pay Commission: மார்ச் 31-க்குள் இதை செய்தால் ஊதியத்தில் இந்த தொகையும் கூடும் title=

7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதிகரித்துள்ள அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றைப் பெற்ற பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது மேலும் ஒரு கொடுப்பனவைப் பெறலாம். 
இதுவரை, கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) பெற முடியாத அனைத்து ஊழியர்களும், 31 மார்ச் 2022 க்கு முன் இதற்கான தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் சிஇஏ கிளைம் செய்ய வேண்டும்

7வது ஊதியக் குழு-வின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள். இது மாதத்திற்கு ரூ.2,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும்,  கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் சிஇஏ-ஐ கோர முடியவில்லை. ஆகையால் இதை கோருவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது. காலக்கெடுவிற்கு முன் சிஇஏ-கிளெய்மை உருவாக்க அதன் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்வோம்.

CEA கோர இந்த ஆவணங்கள் தேவை

குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய அரசு ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் இருந்து பெறப்பட்ட டிக்லரேஷனில், குழந்தை அந்த பள்ளியில்தான் படிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதனுடன் மாணவர் எந்த ஆண்டு அங்கு படித்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். CEA கிளியிம் செய்ய, குழந்தையின் ரிப்போர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிப்பு, மாத இறுதிக்குள் அறிவிப்பு?

சுய அறிவிப்பு (செல்ஃப் டிக்லரேஷன்) கொடுக்க வேண்டும்

ஜூலை மாதம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஒரு அலுவலக அரிக்கையை (OM) வெளியிட்டது. அதில், ‘கொரோனா பாதிப்பால், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் மத்திய பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஏனெனில், ஆன்லைனில் கட்டணத்தை டெபாசிட் செய்த பிறகும், தெர்வு முடிவுகள்/ரிபோர்ட் கார்டுகள் ஆகியவை பள்ளியிலிருந்து எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படவில்லை.' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

DoPT இன் படி, சிஇஏ கோரலை சுய அறிவிப்பு மூலமாகவோ அல்லது தேர்வு முடிவு/ரிப்போர்ட் கார்ட்/கட்டணம் ஆகியவற்றுக்கான SMS/மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் மூலமாகவும் கோரலாம். இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 இல் முடிவடையும் கல்வியாண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.

எவ்வளவு தொகை கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளின் கல்விக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதத்திற்கு ரூ.2250 ஆகும். அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மாதம் 4500 ரூபாய் என்ற அளவில் கொடுப்பனவு கிடைக்கும். இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருந்தால், முதல் குழந்தையுடன் இரட்டையர்களின் கல்விக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இரண்டு கல்வி ஆண்டுகளின் படி, ஒரு குழந்தைக்கு 4500 ரூபாய் கிடைக்க வேண்டும். ஒரு ஊழியர் இதுவரை மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 க்கான கொடுப்பனவை இன்னும் கோரவில்லை என்றால், அதை இப்போது கோரலாம். ஊழியர்கள் குழன்யைகள் கல்விக்கான இந்த கொடுப்பனவை கிளெயிம் செய்தால், அவர்களது ஊதியத்தில் ரூ.4500 சேர்க்கப்படும்.

மேலும் படிக்க | 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! எதிர்பார்த்த அளவு அகவிலைப்படி உயராது? காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News