7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செப்டம்பர் முதல் 28% அகவிலைப்படி பெறத் தொடங்கியுள்ளனர். எனினும், விரைவில் அரசாங்கம் இதில் ஜூன் மாதத்தின் அகவிலைப்படியையும் சேர்த்து வழங்கும் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக அதிகரிக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பம்பர் அதிகரிப்பு இருக்கப் போகிறது.
அகவிலைப்படி 3% அதிகரிக்கவுள்ளது
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில், 3% அகவிலைப்படி (Dearness Allowance) மேலும் அதிகரிக்கும். அதுவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த அதிகரிப்பு எப்போது ஊழியர்களின் ஊதியத்தில் சேரும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும்.
2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது
2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020 இல், 3 சதவிகிதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு, ஜனவரி 2021 இல் இது 4 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்புகளில், உதவித்தொகை 11% அதிகரித்துள்ளது. இப்போது அகவிலைப்படி 28% ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).
சம்பள உயர்வு எப்படி இருக்கும்?
மத்திய அரசு (Central Government) கடந்த 18 மாதங்களாக முடக்கிய அகவிலைப்படி மீதான தடையை நீக்கியது. ஊழியர்களின் டிஏ 11% அதிகரித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 28% சதவீதம் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும். மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் பதவிக்கு ஏற்ப சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
7 வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் அடிப்படையில், லெவல்-1 மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ .18,000 முதல் ரூ .56,900 வரை இருக்கும். எனவே, மத்திய ஊழியருக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கிறது என்பதை அறிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ .18,000 ஐ கணக்கிடுவோம்.
குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 28% அகவிலைப்படியின் கணக்கீட்டை காணலாம்:
ரூ .18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .60,480 ஆக இருக்கும். ஆனால் சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பில் உள்ள வித்தியாசம் ரூ 23760 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .5040 / மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 5040-3060 = ரூ .1980/மாதத்திற்கு
5. வருடாந்திர சம்பள உயர்வு - 1980X12 = ரூ 23760
31% அகவிலைப்படியில் கணக்கீடு
ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். அதாவது, இப்போது அடிப்படை சம்பளமான ரூ .18,000 இல், மொத்த வருடாந்திர உதவித்தொகை ரூ .66,960 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், ஆண்டு சம்பள உயர்வு ரூ .30,240 ஆக இருக்கும்.
31% அகவிலைப்படியின் கணக்கீட்டை காணலாம்:
குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 5580-3060 = ரூ .2520/மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 2520X12 = ரூ. 30,240
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டால், 28% அகவிலைப்படிப்படி, அடிப்படை சம்பளமான ரூ .56900-ல் மொத்த வருடாந்திர உதவித்தொகை ரூ .191,184 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ .75108 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .15,932/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 15932-9673 = ரூ.6259 /மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 6259X12= ரூ.75108
அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .56,900) கணக்கீடு (31%)
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ . 17639/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்
4. அதிகரித்த அகவிலைப்படி - 17639-9673 = ரூ.7966 /மாதம்
5. வருடாந்திர சம்பள உயர்வு - 7966X12= ரூ.95,592
31% அகவிலைப்படிப்படியில், ரூ .56900 அடிப்படை சம்பளத்தில், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .211,668 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், ஆண்டு சம்பள உயர்வு ரூ .95,592 ஆக இருக்கும்.
ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு
இவை அனைத்திற்கும் பிறகு, HRA உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே இறுதிச் சம்பளம் எவ்வளவு என்ற கணக்கீடு வரும். இதற்குப் பிறகு, ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3% அதிகரிக்கும் போது, சம்பளம் அதற்கேற்ப அதிகரிக்கும். அதாவது, ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.
ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR