7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. ஊழியர்களுக்கான சம்பளம் இந்த மாதம் அதிகரித்து வரும்.
28% அகவிலைப்படி அதிகரிப்பைத் தொடர்ந்து அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, அக்டோபர் முதல், ஊழியர்களுக்கு 3% அதிகரித்த அகவிலைப்படியுடன் (Dearness Allowance) மொத்தம் 31 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். அதாவது நவம்பர் மாத சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், அகவிலைப்படி 3% மேலும் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 31% ஆக உயர்ந்துள்ளது.
அகவிலைப்படி 31% ஆக உயர்வு
ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 31% ஆக உயர்ந்துள்ளது. முன்பு அகவிலைப்படி 28% ஆக இருந்தது. இப்போது ஊழியர்களின் நவம்பர் மாத சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
இந்த மாதம் ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் 3% அதிகரிப்புடன் வரும். முன்பு இருந்த 28% அகவிலைப்படியுடன் ஒப்பிடுகையில், தற்போது 31% அகவிலைப்படியின் அடிப்படையில் ஊதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை இங்கே காணலாம்.
ALSO READ:7th Pay Commission: புத்தாண்டில் அடிப்படை ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, விரைவில் அறிவிப்பு
31% அகவிலைப்படியில் கணக்கீடு
அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மொத்த அகவிலைப்படி 31 சதவீதமாக மாறியுள்ளது. இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.66,960 ஆக மாறும். சம்பளத்தில் ஏற்படும் வித்தியாசத்தைப் பற்றி பேசினால், ஊழியர்களின் சம்பளத்தில் (Salary Hike) ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ.5580/மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ.5040/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 5580- 5040 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ.17,639/மாதம்
3. இதுவரை இருந்த அகவிலைப்படி (28%) - ரூ.15,932/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 17,639-15,932= ரூ.1,707 /மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12= ரூ. 20,484
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு டி.ஏ அரியர் பற்றிய சூப்பர் நியூஸ் விரைவில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR