7th Pay Commission: Base Year மாற்றத்தால் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள்

நவம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊதிய விகிதக் குறியீட்டை (WRI) 1963-65=100 என்ற அடிப்படையிலிருந்து 2016=100 ஆக மாற்றியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 07:52 PM IST
  • கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் அகவிலைப்படியை 31 சதவீதமாக உயர்த்தியது.
  • மத்திய அரசு ஊதிய விகிதக் குறியீட்டை (WRI) 1963-65=100 என்ற அடிப்படையிலிருந்து 2016=100 ஆக மாற்றியது.
  • இப்போது அகவிலைப்படி கணக்கிடப்படும் முறையும் மாறும்.
7th Pay Commission: Base Year மாற்றத்தால் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் title=

7th Pay Commission update: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பிற கொடுப்பனவுகள் பற்றிய அறிவிப்புகள் நாளுக்கு நாள் அரசால் புதுப்பிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் அகவிலைப்படியை 31 சதவீதமாக உயர்த்தியது.

நவம்பர் மாதத்தில் மத்திய அரசு (Central Government) ஊதிய விகிதக் குறியீட்டை (WRI) 1963-65=100 என்ற அடிப்படையிலிருந்து 2016=100 ஆக மாற்றியது. 

இதன் பொருள் என்னவென்றால், இப்போது அகவிலைப்படி கணக்கிடப்படும் முறையும் மாறும். அதன் கீழ் ஊழியர்கள் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய தொடர் அதாவது, 2016=100 ஆனது ஏறக்குறைய ஆறு தசாப்தங்கள் பழமையான பழைய தொடரை (1963-65=100) மாற்றியுள்ளது. இது தொழில்களின் எண்ணிக்கை, மாதிரி அளவு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறைகளின் கீழ் உள்ள தொழில்கள், தொழில்களின் வெயிட்டேஜ் போன்றவற்றின் நோக்கத்தையும் கவரேஜையும் அதிகரித்துள்ளது.

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 3% DA-DR 3% உயர்வு

2016=100 அடிப்படையிலான புதிய WRI தொடர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில், பாயிண்ட்-டு-பாயின்ட் அரையாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை தொகுக்கப்படும்.

அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் பெருக்கி இது கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படியின் கணக்கீட்டின்படி, அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்குப் பிறகும் DA ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அகவிலைபப்டி (Dearness Allowance) 31 ஆக உயர்த்தப்பட்ட பிறகு, இப்போது ஊழியர்கள் மேலும் 3 சதவீத அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதன் மூலம், ஊழியர்களின் அகவிலைபப்டி 34 சதவிகிதமாக அதிகரிக்கும், சம்பளத்திலும் பம்பர் உயர்வு ஏற்படும். 

ALSO READ | 7th Pay Commission: இந்த மாதம் கிடைக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி, வரவுள்ளது பம்பர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News