7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு, ஊழியர்களுக்கு மிக விரைவில் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும். புதன் கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து விவாதிக்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்கூட்டத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18 ஆயிரத்திற்கு பதிலாக 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கலாம்
இந்த சந்திப்பிற்குப்பிறகு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படலாம். அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மிகவும் முக்கியமானது. ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் முடிவு செய்யப்படுகிறது. மோடி அரசு, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.
நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது
மத்திய, மாநில ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய, மாநில ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் பேக்டரின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. அதை 3.68 சதவீதமாக உயர்த்தினால், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8 ஆயிரம் உயரும். அதாவது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும்.
மேலும் படிக்க | 7th Pay Commission:அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பெரிய அப்டேட்
அரசு பரிசீலித்து வருகிறது
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றபன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும்.
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். உண்மையில், ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். தற்போது, பணியாளர்கள் 2.57 சதவீத ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் சம்பளம் பெறுகின்றனர். இப்போது அதை 3.68 சதவீதமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.
இது நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். அதாவது இதுவரை இருந்த 18000 ரூபாய் சம்பளம் 26000 ரூபாயாக உயரும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் 7வது ஊதியக்குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை. அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18000ல் இருந்து ரூ.21000 ஆக உயரும். அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க கூட்டத்திலும் இது குறித்த அனுகூலமான செய்தி கிடைத்துள்ளது. அரசாங்கம் இப்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் மீது கவனம் செலுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR