7th Pay Commission: 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் மாத இறுதியில் வரும் சம்பளத்தில் சேர்க்கப்படும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், மூன்று டி.ஏ. தவணைகளும் இந்த சம்பளத்தில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான நல்ல செய்தி இதோடு முடியவில்லை. அகவிலைப்படி மீண்டும் ஒரு முறை அதிகரிக்கப்படலாம்.
ஜூன் மாதத்திற்கான 3% டிஏ அதிகரிப்பு
ஜூன் 2021 க்கான அகவிலைப்படி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கப்படும் என்பது தெளிவாகிறது. இது விரைவில் அறிவிக்கப்படும் என்று ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் பக்கம்) சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இருப்பினும், அது எப்போது செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஆகையால் ஊழியர்களின் ஊதியம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.
2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2020 ஜூன் மாதத்தில் 3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், இது 2021 ஜனவரியில் 4 சதவீதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்புகளால் அகவிலைப்படி 11% அதிகரித்துள்ளது. இப்போது அது 28% ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும் (17 + 4 + 3 + 4 + 3).
சம்பள அளவுக்கு ஏற்ப அதிகரிப்பு இருக்கும்
கடந்த 18 மாதங்களாக இருந்த அகவிலைப்படி (DA Hike) மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஊழியர்களின் டிஏ 11% அதிகரித்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 28% என்ற விகிதத்தில் டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படும். மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பதவிக்கு ஏற்ப சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
ALSO READ:7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா!!
தற்போது சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும், இதோ கணக்கீடு
7 வது ஊதியக்குழு (7th Pay Commission) மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 இன் சம்பள வரம்பு ரூ .18,000 முதல் ரூ .56900 வரை இருக்கும். குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000. செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை குறைந்தபட்ச சம்பளத்தை வைத்து கணக்கிடுவோம்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் கணக்கீடு
28% அகவிலைப்படி என்ற கணக்கில், அடிப்படை சம்பளம் ரூ .18,000-ல், மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .60,480 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசினால், ஆண்டு சம்பள உயர்வு ரூ .23760 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .5040 / மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்
4. அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது - 5040-3060 = ரூ .1980 / மாதம்
5. ஆண்டு சம்பளம் - 1980X12 = ரூ 23760
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தில் கணக்கீடு
லெவல் -1 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ .56900 என்று வைத்து இந்த கணக்கீட்டைப் பார்ப்போம். 28% அகவிலைப்படியின் படி, ரூ. 56900 அடிப்படை சம்பளத்தின் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ .191,184 ஆகும். வித்தியாசத்தைப் பற்றி பேசினால், ஆண்டு சம்பள உயர்வு ரூ .75108 ஆக இருக்கும்.
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56900
2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .15932 / மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 15932-9673 = ரூ. 6259 / மாதம்
5. ஆண்டு சம்பள உயர்வு - 6259X12 = ரூ 75108
இருப்பினும், எச்.ஆர்.ஏ (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே இறுதி சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கணக்கீடு வரும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடு, அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்வு மட்டுமே.
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடையாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR