வாழ்வில் சிகரம் தொட்ட அனைவரும் தனக்கென வெற்றி பெறுவதற்கு முன்னர் சில பிரத்யேக பழக்க வழக்கங்களை பின்பற்றியுள்ளனர். அதனால்தான் அவர்கள் இன்று பலருக்கு எடுத்துக்காட்டாகவும் வெற்றியாளராகவும் விளங்குகின்றனர். நமக்கும் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். ஆனால் வெற்றியை எப்படி அடைகிறோம் என்பதுதான் பலருக்கும் பெரிய கேள்வியாக இருக்கும். வெற்றி பெற்றவர்கள் பலர் சில சுவாரஸ்யமான பழக்கங்களை தங்களது தினசரி வாழ்வோடு இணைத்துள்ளனர். உலகின் மிகவும் வெற்றிகரமான நபர்களின் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.
1.இலக்கை நிர்ணயித்தல்:
வாழ்வில் வெற்றிகரமான நபர்கள் தங்களால் அடையக்கூடிய இலக்குகளை அமைப்பதில் நிர்ணயித்து கொள்வர். அவர்கள், எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றனரோ அதை காட்சிப்படுத்தி கொள்வர். அவையெல்லாம் ஆரம்பத்தில் சிறிய இலக்குகளாக ஆரம்பிக்கும். இதுவே அவர்கள் பிற்காலத்தில் பெரிய இலக்கை அடைய தூண்டுகோளாக அமையும். இதே போலா நீங்களும் வாழ்வில் முதலில் சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதில் வெற்றி காணலாம். அதன் பிறகு உங்களது முக்கிய இலக்கை அடையலாம்.
மேலும் படிக்க | 12 நிமிடங்களில் 17 கி.மீ... இந்தியாவின் அதிவேக ரயில் RapidX மிக விரைவில்.. !
2. நேரத்தை நிர்வாகித்தல்:
“காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்பர். இதை அப்படியே பின் தொடர்பவர்கள், வெற்றியாளர்கள். இவர்கள், தங்களது சில மணித்துளிகளையும் மிகவும் முக்கியமானதாக கருதுவர். நாம் 24 மணி நேரத்தில் இவை, இதற்கான நேரம் என்று ஒதுக்கினால் கண்டிப்பாக நேரத்தை தேவையற்ற விஷயங்களுக்காக வீணடிப்பதை தவிர்க்க முடியும். அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜான்.எஃப்.கென்னடி “நேரத்தை கருவி போல உபயோகிக்க வேண்டும், படுக்கை போல உபயோகிக்க கூடாது..” என்று கூறியுள்ளார்.
3.கற்றல் ஆற்றல்:
கற்றுக்கொடுப்பது எப்படி ஒரு ஆற்றலோ அதே போல தினசரி புது விஷயங்களை கற்றுக்கொள்வதும் ஒரு வித ஆற்றல்தான். வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டே இருப்பது தனி மனிதனை பல்வேறு உயரத்திற்கு கொண்டு செல்லும். அப்படி புதிதான விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்பவர்களுக்கு அறிவுதான் பெரிய சொத்தாக இருக்கும். அதுவே அவர்களுக்கு ஆளும் திறனையும் கொடுக்கும். மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகையும் கற்றல் ஆற்றல் உள்ளவர்களாலேயே மாற்ற முடியும்
4.விடாமுயற்சி:
வெற்றிக்கான வழி பூக்கள் கொட்டி வைத்ததாகவோ அல்லது உங்களை வாரியணைத்து வரவேற்பதாகவோ இருக்காது. இரண்டு அடி முன் வைத்தால் 4 அடி பின்வைக்க வேண்டியதாக இருக்கும். வெற்றிக்கு முன்னால் தோல்வி முந்திக்கொண்டு வரும். இவையனைத்தையும் கடந்தால்தான் வெற்றிக்கனியை ருசிக்க முடியும். முட்டுக்கட்டைகளையும் வாய்ப்புகளாக மாற்றி தோல்வியை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஒரு நல்ல வெற்றியாளரை உருவாக்கும்.
5.பிறருடன் உறவினை வளர்த்துக்கொள்ளுதல்:
வெற்றி பெற, பிறருடன் தொழில் ரீதியான உறவுகளை வளர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. வெற்றியாளர்கள் தங்களது வட்டாரங்களை வளர்த்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பர். காரணம், இதற்கு அவ்வளவு மதிப்பு உள்ளது. வாழ்வில் நாம் ஒரு கட்டத்தில் சந்திக்கும் ஒருவர் பின்னாளில் எதற்காக வேண்டுமானாலும் நமக்கு உதவலாம் என்பதை மறவாதீர்கல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ