2021 மார்கழி மாதம் முதல் நாள்! திருப்பாவை திருவெம்பாவை பாடி அருள் பெறுக எம்பாவாய்!!

மாதங்களில் சிறப்பான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் இறையை துதிக்கும் மாதம் இது... மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு விருப்பமான மாதம் இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2021, 07:36 AM IST
  • திருப்பாவையால் கண்ணனை துதிப்போம்
  • திருப்பள்ளி எழுச்சியால் தேவர்களை வணங்குவோம்
  • திருவெம்பாவையால் சிவனின் மனம் குளிரச் செய்வோம்
2021 மார்கழி மாதம் முதல் நாள்! திருப்பாவை திருவெம்பாவை பாடி அருள் பெறுக எம்பாவாய்!! title=

மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு உகந்த மார்கழி மாதம் இன்று தொடங்கிவிட்டது. கன்னிப்பெண்களால் அனுசரிக்கப்படும் மார்கழி நோன்பு அல்லது பாவை நோன்பு இன்றும் பாரம்பரிய முறைப்படி அனுசரிக்கப்படுகிறது.

வைணவத்தில் மட்டுமல்ல, சைவ சமயத்திலும் மார்கழி மாதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனையும், இயற்கையையும் வணங்க வேண்டும். மார்கழி மாதத்தில், சுபகாரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

கண்ணனின் ஆயர்ப்பாடியைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் மனதுக்கு உகந்த கணவனை அடைய நோன்பு நோற்றனர். இந்த மாதம் முழுவதும் திருப்பாவையை வைணவ பக்தர்கள் பாராயணம் செய்வதுபோல, சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்,  திருவெம்பாவையைப் பாடி மகிழ்வார்கள்.

அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை வழிபடும் கலாசாரம் இந்துக்கள் மத்தியில் இன்றும் மங்காமல் தொடர்கிறது.

ALSO READ | 2022-ல் இவர்கள் மீது சனி பகவானின் அருள் உச்சத்தில் இருக்கும்

ஆழ்வார்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்ணாக இடம் பிடித்திருக்கும் ஆண்டாள் திருப்பாவையை இயற்றினார். 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர்,  திருவெம்பாவையை இயற்றினார்.  

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்ன? தேவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒருநாளுக்குச் சமமானது. தை முதல் ஆனி மாதம் வரையிலுள்ள ஆறுமாதங்கள் தேவர்களுக்குப் பகல் பொழுதாக கருதப்படும் உத்தராயனம் என்பது நம்பிக்கை. 

அதேபோல, ஆடிமாதம் முதல் மார்கழி வரையிலுள்ள ஆறுமாதங்கள் தேவர்களின் இரவான தட்சிணாயனம் ஆகும். அதனால்தான், அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறுமணி வரை, பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் செயல்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும் கருதப்படுகிறது.

கண்ணனை கணவனாக வரிக்க எண்ணிய கோதை நாச்சியார் (Andal the Kodai Nachiyar), தனது ஆசையை இறைவன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மார்கழியில் நோன்பு நோற்றார்.  இதை பாவை நோன்பு என்றும் சொல்கிறோம்.

READ ALSO | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

இந்த பிலவ ஆண்டு மார்கழி முதல் நாள், வளர்பிறை நாளான இன்றைய பாசுரம் 

திருப்பாவை - 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!!

andal

மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சியும் பாடப்படும். இன்றைய முதல் பாடல்...

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருவெம்பாவை - 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்!!

Also Read | கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்? உறியடியின் பின்னணி ரகசியம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News