தீபாவளிக்குள் தங்கத்தின் விலை ரூ.41,000 ஆக உயரலாம்; முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே போனால் உள்நாட்டில் தீபாவளி வரை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.41,000 வரை செல்லலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2019, 02:38 PM IST
தீபாவளிக்குள் தங்கத்தின் விலை ரூ.41,000 ஆக உயரலாம்; முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு! title=

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு காரணமாக, இதன் தாக்கம் உள்நாட்டு சந்தை தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ஜிஎஸ்டி வரியுடன் 40,000 ரூபாயை தாண்டியது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ளி விலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளதால், இதுபோன்ற சூழ்நிலையில், உள்நாட்டு சந்தையில் தங்கம் விற்பனையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்யும் முறை அதிகரித்துள்ளது. 

விலை உயர்வு காரணமாக, தங்கத்தின் மறுசுழற்சி 70 சதவீதம் அதிகரித்துள்ளது. விற்பனை 65 சதவீதம் குறைந்துள்ளது என்று ஜூவல்லர்ஸ் சம்மேளனத்தின் தலைவர் ராகேஷ் ஷெட்டி தெரிவித்தார். தற்போதுள்ள அதிக விலை காரணமாக, ஏற்கனவே வைத்திருக்கும் தங்கத்திற்கு மேக்கிங் கட்டணம் செலுத்துவதன் மூலம் மக்கள் தங்களுக்கு விருப்பமான நகைகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக ஷெட்டி கூறினார். தீபாவளி வரை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.41,000 வரை செல்லலாம் என்றார். இந்த சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பலனளிக்கும் என்றார்.

சென்னையை பொறுத்த வரை 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.29,528, 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.32,208 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதுவே 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் 39,820 ஆக உள்ளது. அதேபோல வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.46742 ஆகவும் உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு காரணிகளோடு, சர்வதேச அம்சங்களும் இணைந்து தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News