’என் உடல் என் உரிமை’ கேரளப் பெண்களின் நூதனப் போராட்டம்!

ஆண்கள் மார்பு என்பது இயல்பானது, பெண்கள் மார்பு என்பது காமப் பொருள் என இரு வேறு விதங்களில் பார்க்கப்படுவது தான் தற்போது கேரளாவில் நிகழ்ந்துவரும் Watermelon போராட்டத்தின் காரணப் புள்ளி!

Written by - Mukesh M | Last Updated : Mar 30, 2018, 05:11 PM IST
’என் உடல் என் உரிமை’ கேரளப் பெண்களின் நூதனப் போராட்டம்! title=

ஆண்கள் மார்பு என்பது இயல்பானது, பெண்கள் மார்பு என்பது காமப் பொருள் என இரு வேறு விதங்களில் பார்க்கப்படுவது தான் தற்போது கேரளாவில் நிகழ்ந்துவரும் Watermelon போராட்டத்தின் காரணப் புள்ளி!

சமீபத்தில், கேரளாவின் பாருக் கல்லூரி பேராசியர் ஒருவர் பெண்களின் மார்பங்களை பற்றி சர்ச்சைக்குறிய கருத்தினை பதிவு செய்தார்.  அவர் பேசியதாவது.. நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கின்றேன், அங்கு 80% மாணவர்கள் பெண்கள் தான். அவர்களில் பெரும்பான்மை மாணவர்கள் இஸ்லாமிய பெண்கள் தான். அவர்கள் கல்லூரிக்கு வருகையில் ஹிஜாப் அணித்து தங்கள் உடலை மறைக்கின்றனர் ஆனால், மறைக்க வேண்டிய மார்பகத்தினை சரிவர மரைப்பதில்லை. தங்களது மார்பகத்தினை காட்சிப்பொருளாய் மற்றவர்களுக்கு காண்பிக்கின்றனர். என தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் மார்பங்களை தர்பூசணி பழங்களுடன் உவமைப் படுத்தி தனது சர்சைக்குறிய கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி மாணவிகள் போராட்ட களத்தில் இறங்கினர். கல்லூரி வாயலின் முன்பு பாதி வெட்டப்பட்ட தர்பூசணி பழங்களுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, கல்லூரி மாணவிகள் இருவர் தர்பூசணி பழத்தினால் தங்கள் மார்பங்களை மறைத்தவாறு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். "என் உடல் என் உரிமை" என்னும் தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவானது, பேராசிரியரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகிரப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்த புகைப்படங்களை பதிவிட்ட பெண்களின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் இச்சமூக ஆர்வலர்களின் போராட்டம் ஓயவில்லை. இப்புகைப்படத்தினை பதிவிட்ட 25 வயது பெண்மனியின் கணவர் தனது ஆதரவினை அவருக்கு தெரிவித்து தானும் அப்புகைப்படத்தினை தன் பக்கத்தினில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ஆதராவாக பலரும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Trending News