11:36 19-05-2018
கர்நாடக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் என்றும் உறுதி தெரிவித்துள்ளது.
11:26 19-05-2018
கே.ஜி.போபையாவை தற்காலிக சபநாயகராக இருக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!
Supreme Court rejects Congress-JD(S) plea challenging appointment of pro tem speaker KG Bopaiah, he will continue to be pro-tem speaker. #Karnataka pic.twitter.com/eMhgYgC0m9
— ANI (@ANI) May 19, 2018
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டமன்றத்தில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நேற்று நியமனம் செய்யப்பட்டார். விராஜ்பேட்டையில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் சட்டப்பேரவைக்கு போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டார். இதனை அடுத்து போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் சட்டப்பேரவையை இன்று காலை 11 மணிக்கு கூட்டவேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அப்போது, எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளது.
கே.ஜி. போபையா, கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் ஆவார்.
இந்நிலையில், போபையா தாற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, காங்கிரஸ் தரப்பில் பதிவாளருடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.