திருமணத்திற்கு தயாரான ஜோக்கர் பட நாயகி!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள காயத்ரி கிருஷ்ணனின் 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Last Updated : Apr 6, 2018, 03:44 PM IST
திருமணத்திற்கு தயாரான ஜோக்கர் பட நாயகி!  title=

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள காயத்ரி கிருஷ்ணனின் 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த 2016 ஆண்டு இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இன்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை 'காயத்ரி கிருஷ்ணன்'. இப்படத்தில் அரசுக்கு எதிராக போராடும் போராளி பெண்ணாக நடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார்.

தற்போது, விஜய் சேதுபதி தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தில் ஹீரோயின் இவர்தான். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள நடிகையான காயத்ரி கிருஷ்ணனுக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. 

கடந்த 2ம் தேதி எளிய முறையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருக்கிறது. 

இது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து தான் நடிக்க உள்ளதாகவும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News