பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி JNU பல்கலை., மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
முன்னதாக வடக்கு டெல்லியின் வசந்து குஞ்ச் பகுதி காவல் நிலையத்தில், JNU பல்கலை மாணவி ஒருவர் தனது ஆசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புருத்துவதாக அவர் மீது புகார் அளித்தார். வகுப்பு நேரங்களில் தன்னை அத்துமீறி தொடுவதாக இந்த புகாரில் குறிப்பிடப் பட்டிருந்தது.
JNU students protest against a professor who allegedly sexually harassed students in class. Students say 'the Police did not take action for 24 hours'. #Delhi pic.twitter.com/JeCvxi0t5r
— ANI (@ANI) March 17, 2018
இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குற்றம்சாட்டப் பட்ட பேராசிரியர் அதுல் ஜோஸி பல்கலை நிர்வாக பணியில் இருந்து விலகினார். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர, தென்மேற்கு பகுதி காவல் நிலைய அதிகாரி மில்லிண்ட் தும்பரே பேராசிரியின் மீது IPC 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் இதுவரை பேராசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவம் பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பேராசிரியரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.!