IPL_2018: கவுதம் அதிரடி ஆட்டதால் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்!!

IPL_2018 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Last Updated : Apr 23, 2018, 09:22 AM IST
IPL_2018: கவுதம் அதிரடி ஆட்டதால் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்!! title=

IPL 2018 தொடரின் 11-வது சீசனின், 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங்செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. 

ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், தவால் குல்கர்ணி 2 விக்கெட்டும், உனட்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் ரகானே மற்றும் திரிபாதி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். 

இறுதியில் தனது அதிரடியை வெளிபடுத்திய கவுதம் 11 பந்துகளில்  2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி அடைய செய்தார்

கவுதம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி அடைய செய்தார்.  2 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது வெற்றியை ருசித்தது.
 

Trending News