IPL_2018: கெயிலின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி வெற்றி!

IPL 2018, 16-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது!

Last Updated : Apr 20, 2018, 06:07 AM IST
IPL_2018: கெயிலின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி வெற்றி! title=

IPL 2018, 16-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது!

IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்து விளையாடியது. 

தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 104(63) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதரபாத் அணி களமிறங்கியது.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா 6(7), தவான் 0(1) ரன்களில் வெளியேற அணி ஆரம்பத்திலே தடுமாற தொங்கியது. எனினும் வில்லியம்ஸன் 54(41) மற்றும் மனிஷ் பாண்டே 57(42) ரன்கள் குவித்து அணியின் நிலைமையினை மீட்டனர். எனினும் ஹைதரபாத் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்ககு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

பஞ்சாப் அணி தரப்பில் மோகித் ஷர்மா, ஆன்ட்ரீவ் தல 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்நிலையில் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் தோல்வி பெற்றதன் மூலம் ஹைதரபாத் அணி இந்த IPL  தொடரில் முதல் தோல்வியினை தழுவுகிறது.

புள்ளிப்பட்டியல் விவரம்...

Trending News