ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப்போட்டி தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக நியமனம்
இந்நிலையில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ஃப்க்கு(ஆஸ்திரேலியா) முதுகு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாட உடற்தகுதி பெறவில்லை.
தங்கள் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்ற நிலையில், ஜேசன் பெரேன்டர்ஃப்-க்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லினகஹான்-னை எடுத்துகொள்ள விண்ணப்பம் செய்திருந்தது. அதற்கு ஐபிஎல் கமிட்டி அனுமதி வழங்கியது.
ஐபிஎல் சீசன் வித்தியாசமாக இருக்கும் ஆர்சிபி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா
இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லினகஹான்-னை வாங்கி உள்ளது.
31 வயதான மிட்செல் மெக்லினகஹான் ஐ.பி.எல் 2017 சீசனில் 14 போட்டியில் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2017 வரை மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Paltan, our champion is with us! @Mitch_Savage returns to MI for his fourth season in a row, as he replaces the injured @JDorff5.#CricketMeriJaan pic.twitter.com/sT7RNW6c08
— Mumbai Indians (@mipaltan) March 19, 2018