IPL _2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

Last Updated : May 8, 2018, 07:45 PM IST
IPL _2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் title=

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மோதுகின்றனர்.

 

 


ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 40-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள வை மன் சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

இராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்நிலையில் பஞ்சாப் உடனான இன்றைய போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இராஜஸ்தான் அணி வெற்றிக்கு போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இராஜஸ்தான் இராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வென்று, தன் வெற்றியின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி உயர்த்த முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது! 

Trending News