ஐபிஎல் 2018: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்!

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!  

Last Updated : May 9, 2018, 07:50 PM IST
ஐபிஎல் 2018: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்! title=

இன்று இரவு நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியில் டாஸ் வென்றது கொல்கத்தா அணி. இன்னும் சற்று நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 41-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு, சென்னை அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய கொல்கத்தா அணி, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 4இல் மட்டுமே வென்றுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. பிறகு நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியடைந்தது.

இந்த தோல்விகளால் மும்பை அணி இனிவரும் போட்டிகளில் வென்றால் தான் இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அணி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. எனவே இன்றைய போட்டியிலும் மும்பை அணி வெற்றிக்காக போராடும் என எதிர்ப்பார்க்கலாம்..

Trending News