IPL_2018: 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐபிஎல் தொடரின் 30-வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் புனே மைதானத்தில் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Last Updated : May 1, 2018, 08:27 AM IST
IPL_2018: 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி சென்னை வெற்றி title=

ஐபிஎல் தொடரின் 30-வது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் புனே மைதானத்தில் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

சென்னை அணி:-

அதன்படி சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 9-வது ஓவரின் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

சென்னை அணி 102 ரன்கள் எடுத்திருந்த போது டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரய்னா 1 ரன்னில் அவுட்டானார்.
வாட்சன் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில் அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். 

இறுதியில், சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. 

டெல்லி அணி:-

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, காலின் முன்ரோ இறங்கினர்.

பிரித்வி 9 ரன்னிலும், காலின் முன்ரோ 26 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 13 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.
இதனால் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.

16 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 45 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் அரை சதமடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News