FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - | Last Updated : Dec 24, 2019, 06:42 AM IST
FAST-45: ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

1. பிரசாந்த் கிஷோரை திமுகவின் வேலைக்காரர் என அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு... பிரசாந்த் குழுவினர் அதிருப்தி

2. படுதாவுடன் வந்ததால் குடியரசுத்தலைவர் பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு... தங்கப்பதக்கத்தை புறக்கணித்த முஸ்லிம் மாணவி...

3. கொடைக்கானலில் குளுகுளு சீஸன்... வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு...

4. நாளை முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து. உள்ளாட்சி தேர்தல் பணியை முன்னிட்டு ரத்து என தற்காலிகமாக ரத்து சென்னை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

5. சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை... சென்னை உயர்நீதிமன்ற வரம்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருவதால் பெயர் மாற்ற இயலாது என நீதிபதிகள் குழு நிராகரிப்பு...

6. தமிழக விமானநிலையங்களில் தொடர்கிறது தங்கம் கடத்தல்... நேற்று முன்தினம் ஷார்ஜாவில் இருந்து நுாதன முறையில் ஏர்கூலரில் கடத்தி வந்த 7 கிலோ தங்கத்தை கோவை விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை விமானநிலையத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் நேற்று பறிமுதல்

7. கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் டில்லியைச் சேர்ந்த 111 வயது வாக்காளர் பச்சன் சிங், ஆர்வத்துடன் வாக்களித்தார்...
இவர் கடந்த, 1951ம் ஆண்டு முதல், ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறாமல் ஓட்டளித்து வந்தார் பச்சன் சிங்.... உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார்.

8. ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்... ஆட்சியை இழந்தது பாஜக...

9. ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்தியா அணி... இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு...

10. தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல்... நாளையுடன் பிரசாரம் நிறைவு... 27ல் வாக்குப்பதிவு...  

11. குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஹரியானா உள்துறை அமைச்சர் அனில்-விஜ் கண்டனம்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் துன்புறுத்தப்படும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்க்கும் சோனியா காந்தியே, இத்தாலியில் இருந்து வந்து இந்தியாவின் குடியுரிமையைப் பெற்றவர்தான் என்று கேலி.

12. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் ரயில் நிலையத்தில் 'ஆக்சிஜன் பார்லர்' திறப்பு... காற்று மாசுபாடுக்கு ரயில்வே நிர்வாகம் புதிய தீர்வு...

13. குடியுரிமைச் சட்டம் குறித்து பிரதமா் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும்... மாஜி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்...

14. குடியரசுத் தலைவா் இன்று திருநள்ளாறு வருகை... சனிபகவானை தரிசிப்பு... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

15. தில்லியில் இன்று ஜாமியா மாணவர்கள் மக்களுடன் என்ற முழக்க ஆர்ப்பாட்டம் … மண்டி ஹவுசிலிருந்து ஜந்தர்மந்தர் வரை நாளை பேரணி செல்ல முடிவு

16. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் டிசம்பர் 10 முதலான வன்முறை சம்பவங்கள்… 213 வழக்குகள் பதிந்து 925 பேர் கைது...

17. கொல்கத்தாவில் மம்தா தலைமையில் மாபெரும் ஊர்வலம்… என்ஆர்சிக்கு எதிராக பலப்பரிட்சை...

18. போபாலில் சிக்கிய போலி அரிசி… பிளாஸ்டிக்கில் தயாரானதா என அதிகாரிகள் தீவிரப் பரிசோதனை

19. பிரபல சுற்றுலா தலமான மவுண்ட் அபுவில் கரடிகள் தொல்லை அதிகரிப்பு… ஹோட்டல் மற்றும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் மக்கள் பீதி

20. உத்தரப்பிரதேசத்தின் லலீத்பூர் மாவட்டத்தில் பெருகிவரும் தெருநாய்கள் தாக்குதல்... ஒரே மாதத்தில் 300 பேருக்கு நாய்க்கடியால் சிகிச்சை

21. உஜ்ஜயினி வங்கியில் தங்க நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம மனிதர்...

22. குருகிராமில் பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை… தனியார் நிறுவன அதிகாரி கைது

23. குஜராத்தின் காந்திநகரில் கலப்பட நெய் தொழிற்சாலை… ஆயிரத்து 450 கிலோ டப்பா நெய் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல்..

24. மகாராஷ்டிரத்தில் சிவசேனையினர் அடாவடி ஆரம்பம்… நெட்டிசனை பிடித்து மொட்டை அடித்ததால் பரபரப்பு.

25. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் வன்முறை தூண்டல்… வெறுப்புணர்வு பதிவுகளை பகிர்ந்ததற்காக 120 பேர் கைது… 

26. சினிமாவுக்கு உகந்த சிறந்த மாநிலமாக உத்தராகண்ட் தேர்வு… 66ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருது… 

27. உத்தரப்பிரதேசத்தில் கணக்காளர்கள் மெத்தனத்தால் அரசுப்பணிகள் தேக்கம்… பல மாவட்டங்களில் ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது

28. உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது… ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி

29. லக்னௌவில் வன்முறையை தூண்டிவிட்டதாக பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பிரமுகர் நதீம் உள்பட மூவர் கைது

30. காப்பீடு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க நிறுவனங்கள் ஒப்புதல்… முதலீடு வரம்பை 49 முதல் 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு என தகவல்

31. நைனிடாலில் கடும்பனி பொழிவால் ஆப்பிள் விவசாயிகள் மகிழ்ச்சி… அமோக விளைச்சலாகும் என குஷி

32. உத்தரப்பிரதேச மின்வாரிய சேமநல நிதி மோசடியில் கைதான நிர்வாக இயக்குநர் மிஸ்ராவின் ராஜிநாமா கடிதம் மாயம்… 5 பேருக்கு போலீஸ் வலை

33. ஆஜ்மீர் சிறையில் காவலர்கள் அதிரடி சோதனை… கைதிகளிடமிருந்து செல்போன் மற்றும் சார்ஜர்கள் பறிமுதல்

34. ராஜஸ்தானின் ஸ்ரீதுன்கரில் வேட்டையாடப்படும் தேசியப்பறவைகள்… 23 மயில்கள் சடலமாக மீட்பு… ஒருவர் கைது

35. ராஜஸ்தானில் நடுங்க வைக்கும் குளிர்… ஷெகாவதி, பிக்கானீரில் உறைபனியால் மக்கள் இயல்பு பாதிப்பு

36. சத்தீஸ்கரில் இன்று 151 நகராட்சிகளுக்கான தேர்தல் முடிவு... வாக்கு எண்ணிக்கைக்காக பலத்த பாதுகாப்பு

37. புதிய வெளியுறவு செயலராகிறார் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்த்தன்… 1984 பேட்ஜ் ஐஎப்எஸ் அதிகாரி… ஜனவரி 29ல் பதவியேற்பு… 

38. சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய பழங்குடியினர் நடன விழாவில் பங்கேற்க முதல்வர் கமல்நாத்துக்கு அழைப்பு… பழங்குடி கலைஞர்களை அனுப்பிவைக்க வேண்டுகோள்...

39. விமானத்தில் சர்ச்சை குறித்து பெண்துறவி பிரக்யா விளக்கம்… நான் பிரச்னை செய்தது ஆடம்பரத்துக்காக அல்ல… அமைச்சர் பிசி சர்மா சண்டையிட நினைத்தால் விவசாயிகளுக்காக மத்திய அரசுடன் மோதட்டும் என பதில்...

40. சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு முன்பே கட்சிகளிடையே மோதல்… வாக்குச்சீட்டில் மோசடி நடந்ததாக பாஜக தலைவர் விக்ரம் உசெண்டி குற்றச்சாட்டு

41. மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் அமைதி திரும்பியது… படிப்படியாக 144 தடையுத்தரவு நீக்கம்...

42. குவாலியரில் அமிலம் குடித்து பெண் தற்கொலை… ஆபாச விடியோ எடுத்து பாலியல் கொடுமை செய்ததாக இளைஞர் மீது தற்கொலை கடிதத்தில் புகார்…

43. அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது குவாலியர் நிர்வாகம் நூதன நடவடிக்கை… கட்டடங்களை இடிப்பதற்கு பதில் அரசு அலுவலகங்களை அமைக்கத் திட்டம்… தயாராகிறது பட்டியல்

44. மத்தியப்பிரதேசத்தில் கூட்டுறவுத்துறை சீர்கேடுக்கு அரசு நிர்வாகம் காரணம் என காங்கிரஸ் அமைச்சர் பரபரப்பு…ஆண்டுகளாக நலிவுற்ற கூட்டுறவு அமைப்புகளை மீட்க யோசனை...

45. சவூதியில் பத்திரிகையாளர் காஷோகி கொலை வழக்கில் ஐவருக்கு மரணதண்டனை… 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை மூவர் விடுவிப்பு.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News