COVID-19: 'ஆபத்தான தவறான தகவல்' பரப்பும் 10 லட்சம் வீடியோக்களை நீக்கியது YouTube

தடுப்பூசி கொள்கையை மீறும் வகையில், சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனம் வழங்கும் ஒருமித்த கருத்துக்கு முரணான வீடியோக்களை யூட்யூப் நீக்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 02:15 PM IST
  • COVID-19 தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் 1 மில்லியன் வீடியோக்களை YouTube நீக்கியுள்ளது
  • YouTube வீடியோ தளம் கூகுளுக்கு சொந்தமானது
  • YouTube ஒவ்வொரு காலாண்டிலும் கிட்டத்தட்ட 10 மில்லியன் வீடியோக்களை நீக்குகிறது.
COVID-19: 'ஆபத்தான தவறான தகவல்' பரப்பும் 10 லட்சம் வீடியோக்களை நீக்கியது YouTube title=

புதுடெல்லி: பிப்ரவரி 2020 முதல் கூகிளுக்குச் சொந்தமான யூடியூப் (Youtube) தளத்தில் உள்ள, கோவிட் -19 தவறான தகவல்கள், மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான தவறான கூற்றுக்கள், உண்மைக்கு புறம்பான் செய்திகள் ஆகியவை அடங்கிய 1 மில்லியன், அதாவது 10 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது.

யூடியூப்பின் தலைமை அதிகாரி நீல் மோகன் இதுன் குறித்து கூறுகையில்,  "மோசமான உள்ளடக்கம்  உள்ளவற்றின் எண்ணிக்கையை  பார்த்தால், YouTube  உள்ள பில்லியன் கணக்கான வீடியோக்களில் ஒரு சிறிய சதவீதம் எனலாம் (மொத்த வ்யூஸ்களில் சுமார் 16-18 சதவிகிதம் எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கமாக உள்ளது)" என்று அவர் புதன்கிழமை ஒரு வலைப்பதிவு ஒன்றில் கூறினார்.

Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…

"தவறான தகவல்கள் இப்போது மிக வேகமாக தீ போல பரவுகின்றன. சில சமயங்களில் நொடிப் பொழுதில்  லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது" என்று அவர் கூறினார்.

மோகன் மேலும் கூறுகையில், ஒவ்வொரு காலாண்டிலும் யூடியூப் கிட்டத்தட்ட 10 மில்லியன் வீடியோக்களை நீக்குகிறது, அவற்றில் பெரும்பாலானவை 10 பார்வைகளைக் கூட எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாகவே அவை நீக்கப்பட்டு விட்டன என்றார்.

Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR

மேலும், "தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுக்கும் வீடியோக்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பது எப்போதுமே முக்கியம். ஆனால் நிச்சயம் அது மட்டும் போதாது என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு பதிலாக, யூடியூப் தளத்தை சிறந்த தளமாக ஆக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் கூறினார்.

யூடியூப் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்களை சேகரித்து, தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுடன் வீடியோக்கள் பரப்பப்படுவதை குறைக்கிறது. "கோவிட் -19  தொடர்பாக தகவல்களுக்கு, மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும்  உலக சுகாதார அமைப்புகளின் நிபுணர்களின் ஒருமித்த கருத்து மட்டுமே ஏற்கக் கூடியது" என்று மோகன் கூறினார்.

சுகாதார அதிகாரிகள், நிபுணர்கள், மருத்துவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு (WHO)  வழங்கிய தடுப்பூசி (Corona Vaccine) தொடர்பான ஒருமித்த கருத்துக்கு முரணான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள், தவறான  கருத்தை சமூகத்தில் பரப்பும் வீடியோக்கள் யூட்யூப் கொள்கைக்கு எதிரானதாகும். 

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பிற தளங்களும் இத்தகைய தவறான உள்ளடக்கத்தின் பரவலை கட்டுப்படுத்த கொள்கைகளை வகுத்துள்ளன.

ALSO READ | உடலுறவில் ஆணுறைக்கு பதிலாக பசையை பயன்படுத்திய நபர் பரிதாப மரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News