புதுடெல்லி: டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, ‘டெபாசிட் வைத்திருப்போருக்கு முன்னுரிமை; ரூ.5 லட்சம் வரையிலான உத்தரவாதமான டெபாசிட் காப்பீடு தொகை’ பற்றி உரையாற்றினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், "வங்கிகள் மூடப்பட்டது குறித்த செய்திகள் பலவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும். இந்நிலையில், இன்று நாடு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, வங்கி முதலீட்டார்களின் முதலீட்டிற்கு உத்த்ரவாதம் அளித்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது, இனி, வங்கிகள் மூழ்கினாலும், முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் பணம் 90 நாட்களுக்கும் திருப்பி அளிக்கப்படும்” என்றார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், ‘இது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஒருவேளை எதிர்காலத்தில் வங்கி மூழ்கினாலும் முதலீட்டாளர்களின் பணம் மூழ்காது. இந்த உத்திரவாதம் வங்கி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்பத்தும். இன்றைய நிலவரப்படி வங்கி ஏதேனும் சிக்கலில் சிக்கினாலோ அல்லது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக மூழ்கினாலோ, டெபாசிட் செய்பவருக்கு ரூ.5 லட்சம் வரை திரும்பப் அளிக்கப்படும்’ என பிரதமர் மோடி (PM Modi) கூறினார். இந்த புதிய உத்திரவாதத்தினால், 98 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள்.
ஒரு காலத்தில் ஒரு வங்கி சிக்கலில் இருந்தால், அதிக்ல் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை பெற முடியாமல் தவித்ததைக் கண்டோம். எந்தவொரு நபரும் மிகுந்த நம்பிக்கையுடன், தனது வருங்கால பாதுக்காப்பு உள்ள பல காரணங்களை கருத்தில் கொண்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். ஆனால் தவறான கொள்கைகளால் வங்கி மூழ்கும் போது, இந்தக் குடும்பங்களின் பணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிக்கித் தவிக்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது டெபாசிட் செய்தவருக்கு மூன்று மாதங்களுக்குள் பணம் கிடைத்துவிடும் என்ற வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ALSO READ | பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்! பிட் காயின் பற்றிய போஸ்டால் பரபரப்பு!!
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் டெபாசிட் கணக்குகளும் அடங்கும். டெபாசிட் காப்பீட்டின் கீழ் , வைப்புத்தொகைக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள் (FD), நடப்புக் கணக்குகள் மற்றும் தொடர்ச்சியான வைப்புத் தொகைகளும் ( RD) அடங்கும்
5 லட்சம் வங்கி வைப்பு காப்பீடு
வங்கி சீர்திருத்தங்களில், ஒரு முக்கிய நடவடிக்கையாக, வங்கி வைப்புத்தொகை காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை முன்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. இதன் கீழ், வங்கி மூழ்கினாலும், நீங்கள் முதலீடு செய்துள்ள தொகையில் ஐந்து லட்சம் ரூபாய் பாதுகாப்பாக திரும்ப கிடைக்கும்.
நாட்டிற்கும், வங்கித் துறைக்கும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இன்று மிக முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி கூறினார். பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஒரு பெரிய பிரச்சனை தீர்க்கப்பட்டது. டெபாசிட்தாரர்களுக்கு முதலீடு செய்தபணத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்போது, வங்கிகள் மீதான நம்பிக்கை அதிகரித்து, வங்கிகள் வளர்ச்சி பெறும். வங்கிகளை பாதுகாக்க, டெபாசிட்தாரர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். சிறிய வங்கிகளின் திறன், அளவு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவே, அவை, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறினார்.
சரியான நேரத்தில் தீர்வு காண்பதன் மூலம் எந்த நாடும் பிரச்சனைகள் தீவிரமாகாமல் காப்பாற்ற முடியும், ஆனால் பல ஆண்டுகளாக பிரச்சனைகளை தவிர்க்கும் போக்கே நிக்லவியது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இன்றைய புதிய இந்தியா பிரச்சனைகளை தீர்ப்பதில் வலியுறுத்துகிறது. நமது நாட்டின் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் சந்திக்கும் பிரச்சனையை , இந்த அரசு மாற்றங்களை, சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.
ALSO READ | ஒமிக்ரான் பீதி; மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை அமல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR