'மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்...' காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்

Yogi Adityanath: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத ரீதியில் இட ஒதுக்கீடு அமலாகும் எனவும், தாலிபான் பாணியில் ஆட்சி நடைபெறும் என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 25, 2024, 06:34 PM IST
  • காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையின் மூலம் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது - யோகி ஆதித்யநாத்
  • அரசியலமைப்பு சட்டத்திற்கு காங்கிரஸ் அச்சுறுத்தலை உண்டாக்குகிறது - யோகி ஆதித்யநாத்
  • காங்கிரஸ் ஷரியா சட்டத்தை கொண்டு வருவார்கள் - யோகி ஆதித்யநாத்
'மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்...' காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக் title=

Yogi Adityanath Slams Congress: 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து நாளை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் நாளை (ஏப். 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கின. குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் பிரதமர் மோடி ராஜஸ்தானில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. தொடர்ந்து, சொத்து வாரிசுரிமை வரி உள்ளிட்ட பல பிரச்னைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்தன. இதில், பாஜக மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர்களுக்கு முறையே நட்சத்திர பேச்சாளர்காளன பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் இன்று சம்மன் ஒன்றை அனுப்பியிருக்கிறது. 

தாலிபான் பாணியில் ஆட்சி...

குறிப்பாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை விறுவிறுப்பாக நடைபெற உள்ள நிலையில், இந்த பிரச்னைகளும் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் இன்று மீண்டும் காங்கிரஸ் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில்,"குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தனியே சட்டம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் அதன் தேர்தல் அறிக்கையில் எழுதியிருக்கிரது. அதாவது, காங்கிரஸ் ஷரியா சட்டத்தை கொண்டுவந்து தாலிபான் பாணியில் இந்தியாவில் ஆட்சி நடத்த திட்டமிடுகிறது. இதன்மூலம், பாபா சாகேப் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் அதன் இந்தியா கூட்டணி கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது" என்றார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு

மேலும் அவர்,"இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் எப்போதெல்லாம் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பட்டியலினத்தோர், பட்டியல் பழங்குடிகள், பின்தங்கிய வகுப்பினர், ஏழைகள் ஆகியோரின் உரிமையை பறிக்க சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். 

யோகி ஆதித்யநாத் வாரிசுரிமை வரி, சொத்தை பகிர்ந்தளிப்பது குறித்தும், 2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உண்டு என பேசியது குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார். 

அதில்,"காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதன் தேர்தல் அறிக்கையின் மூலம் நாட்டிற்கு மிக கொடிய துரோகத்தை செய்துள்ளன. அவர்கள் வறுமை ஒழிப்போம் என வாக்குறுதி கொடுப்பதன் மூலம், மறைமுகமாக உங்களின் சொத்துக்களை முடக்குவார்கள. தொடர்ந்து, உங்கள் மகள், தாயாரின் நகைகைளையும் அவர்கள் முடக்குவார்கள். கர்நாடகாவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் கொண்டுவரும்" என்றார். 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், அடுத்து மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.  தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆகியவை ஆட்சியை பிடிக்க கடுமையான பரப்புரையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News