கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் ராவ். பறவை இனங்கள் மீதான ஆளாதியான அன்பு கொண்ட இவர் தனது வீட்டில் அதை சாதித்தும் காட்டி இருக்கிறார். ஜெயராம் ராவின் முயற்சிக்கு ஒட்டுமொத்த குடும்பமும் தோல் கொடுத்தது. அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற முடிவெடுத்தவர் அதற்காக தன்னுடைய வீட்டில் பிவிசி பைப்புகளை கொண்டு நூற்றுக்கணக்கான கூடுகளை உருவாக்கியுள்ளார்.
மேலும் படிக்க | உலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை; வைரலாகும் புகைப்படம்!இயற்கையான சூழலை சிட்டுக்குருவிகள் அனுபவிக்க வீட்டிலேயே சிறிய தோட்டம் மற்றும் நீர்வீழ்ச்சியை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் வந்த சிட்டுக்குருவிகள் வீட்டுச் சூழளுக்கு பழக்கமடைந்த பிறகு அவைகள் இங்கேயே தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க தொடங்கியது. இப்படியாக தற்போது ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான குருவிகள் ஜெயராம் ராவ் வீட்டில் வட்டமிட்டு வருகிறது.
மேலும் படிக்க | பறவைகளுக்கு என்றே பிரத்யேக பறவை பிளாட் காலனி உருவாக்காம்..!
சிட்டுகுருவிகளுக்கு சாப்பிட்ட தினமும் ஒரு மெனு என்று பார்த்து பார்த்து அவைகளை பிள்ளைகள் போல கவனித்து வருகிறார்கள்.
அதை விட மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான விசயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் உலக சீட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஜெயராம் ராவ் வீட்டில் குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டாருடன் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். அழிந்துவிடுமோ என்ற உயிர்பயத்தில் பறக்க மனமில்லாமல் ஓடி ஒழிந்துகொள்ளும் கொஞ்ச நஞ்ச சிட்டுக்குருவிகளும் இனி நிம்மதியாக பறக்கும் ஜெயராம் ராவின் வீட்டுக்குள்ளே...
மேலும் படிக்க | தேசிய பறவை மயில்கள் பற்றிய அறிய ரகசியங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR