COVID-19 நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் உதவி

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக வங்கியிடமிருந்து ஒரு பெரிய நிவாரணமாக நிதி உதவி கிடைத்தது. இது குறித்த ஒரு அறிக்கையை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் வெளியிட்டனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 30, 2021, 09:43 PM IST
  • இந்தியாவுக்கு உலக வங்கியிடமிருந்து ஒரு பெரிய நிவாரணமாக நிதி உதவி கிடைத்தது.
  • இந்தியாவின் முறைசாரா பணியாளர்களை ஆதரிப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
  • இது இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான நிதி உதவி-உலக வங்கி
COVID-19 நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் உதவி  title=

புதுடெல்லி: தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக வங்கியிடமிருந்து ஒரு பெரிய நிவாரணமாக நிதி உதவி கிடைத்தது. இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்ட உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள், இந்தியாவின் முறைசாரா பணியாளர்களை ஆதரிப்பதற்கும், வரக்கூடிய தொற்றுநோய் அலைகள், எதிர்கால காலநிலை மற்றும் பேரழிவு அதிர்ச்சிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதற்கும் 500 மில்லியன் டாலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினர். 

ஒருங்கிணைந்த மற்றும் திடமான இந்திய சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்குதல் (CCRISP) என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKY) இன் கீழ் திட்டங்களை ஆதரிப்பதற்காக , இந்தியாவின் 1.15 பில்லியன் டாலர் கோவிட் -19 சமூக பாதுகாப்பு மறுமொழி திட்டத்தை துரிதப்படுத்துகிறது.

உலக வங்கியின் புதிய உதவியுடன், மாநிலங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையையும் அதிக நிதி உதவியையும் பெறும். மேலும், 15 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் கீழ் நிதிப் பகிர்வு மாநிலங்களுக்கு ஏற்ற சமூக பாதுகாப்பு முறையை உருவாக்கவும், விலக்கப்பட்ட குழுக்களுக்கு ஆதரவை வழங்கவும், சூழல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும். 

உலக வங்கியின் (World Bank) இந்த உதவி COVID-19 க்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் எந்தவொரு நெருக்கடிக்கும், சுற்றுச்சூழல் ஆபத்து அல்லது இயற்கை பேரழிவுக்கும் உதவியாக இருக்கும்.

புவியியல் ரீதியாக பெருந்தொற்றால் இலக்கான ஹாட்-ஸ்பாட் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பேரழிவு நிவாரண நிதிகள், தொற்றுநோயின் தற்போதைய கட்டத்திலும், எதிர்காலத்தில் வரக்கூடிய அலைகளிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ALSO READ: வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு: DGCA

“ அரசாங்கம் புதிய நகர்ப்புற தளங்களை அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் சமூக பாதுகாப்பை ஆழப்படுத்த இந்த திட்டம் இந்த தளங்களை பலப்படுத்தும்" என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான நிதி உதவி, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவும் என்று கூறப்படுகின்றது. 

கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதல் இரண்டு  நிதி உதவி செயல்பாடுகள், சுமார் 320 மில்லியன் தனிநபர் வங்கிக் கணக்குகளுக்கு உடனடி அவசர நிவாரண பணப் பரிமாற்றங்களை வழங்கியது. இவை, ஏற்கனவே உள்ள தேசிய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுமார் 800 மில்லியன் தனிநபர்களுக்கான கூடுதல் உணவுப் பொருட்களுக்கான கணக்குகல் மூலம் அடையாளம் காணப்பட்டன. 

ஒரு அறிக்கையில், உலக வங்கி 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் (Pandemic) தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு சிக்கல்கள் வெளிவந்துள்ளன என்று கூறியது. 

“முதலாவதாக, இந்தியாவின் பாதுகாப்பு நிகர திட்டத்தின் கிராமப்புற இலக்கு மற்றும் நன்மைகளின் பெயர்வுத்திறன் இல்லாதது நகர்ப்புற மற்றும் புலம்பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்களின் அதிகரித்த துன்பங்களுக்கு வழிவகுத்தது. இரண்டாவதாக, நெருக்கடி அதிக விரிவுபடுத்தலுக்கான அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சிகளைச் சமாளிக்க எதிர்கால நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் சார்ந்த பாதுகாப்பு வலைகளை வடிவமைப்பதற்கான அதிகரித்த ஒருங்கிணைப்புக்கான அவசியத்தையும் இது அதிகரித்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: IMA on COVID-19 2nd wave: கோவிட் இரண்டாம் அலைக்கு 798 மருத்துவர்கள் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News