மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது! வாழ்த்து தெரிவிக்கும் எம்.பிக்கள்

Women Reservation Bill: வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2023, 08:22 AM IST
  • வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
  • தொகுதி வரையறைக்கு பின் அமலுக்கு வரும் மசோதா
  • 33% இடஒதுக்கீடு: இன்னும் சில ஆண்டுகள் காத்திருந்தால் போதும்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது! வாழ்த்து தெரிவிக்கும் எம்.பிக்கள் title=

புதுடெல்லி: வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 214 வாக்குகளுடன் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை, வியாழன் அன்று 'நாரி சக்தி வந்தான் ஆதிநியம்' (Nari Shakti Vandan Adhiniyam) எனப்படும் 'பெண்கள் இடஒதுக்கீடு மசோதா'வுக்கு பச்சைக்கொடி காட்டியது. இந்த மசோதா 214 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது என்பதும், மசோதாவுக்கு எதிராக ஒரு எம்.பி கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, புதன்கிழமை (2023, செப்டம்பர் 20) இந்த மசோதா மக்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பாஜக தலைமையிலான அரசு கொண்டுவந்த இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (All India Majlis-E-Ittehadul Muslimeen (AIMIM) ) கட்சியைச் சேர்ந்த இரண்டு மக்களவை உறுப்பினர்கள், அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது சகாவான இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா

அரசியலமைப்பு சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா, 2023, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றும். இந்த மசோதாவின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.

மேலும் படிக்க | மக்களவையில் 454-2 பெரும்பான்மையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது!

பிரதமர் மோடி வாழ்த்து
சமூக ஊடக தளமான X இல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமக்களுக்கு "நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தின் வரையறுக்கும் தருணம்" என்று கூறியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலங்களவை எம்.பி.க்களின் ஒருமித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த மோடி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் "இந்தியாவின் பெண்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் சகாப்தம்" உருவாகும் என்றும் கூறினார்.
"நாரி சக்தி வந்தான் ஆதினியம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியப் பெண்களுக்கு வலுவான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரம் அளிக்கும் சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். இது வெறும் சட்டம் மட்டுமல்ல; இது நம் தேசத்தை உருவாக்கிய எண்ணற்ற பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் கடமை ஆகும். அவர்களின் பங்களிப்புகளால் இந்தியா வளப்படுத்தப்பட்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார்.

"இன்று நாம் விடுதலையை கொண்டாடும் போது, நமது தேசத்தின் அனைத்து பெண்களின் வலிமை, தைரியம், மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை நினைவுகூர்கிறேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் என்ற சரித்திர சம்பவம் பெண்களின் குரல்கள் இன்னும் திறம்பட கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாடாகும்," என்று பிரதமர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | “ஒன்பதரை ஆண்டுகளில் மோடி என்னத்தை கிழித்து உள்ளார்?” உதயநிதி ஸ்டாலின் காரசார பேச்சு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யதை அடுத்து பிரதமருக்கு பெண்களின் பாராட்டுகள்ல் தொடர்ந்து கிடைத்துவருகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள், பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மாநிலங்களவையில் பெண் எம்.பிக்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தற்போது எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வகையின்படி, பொது, எஸ்சி, எஸ்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவாக இருக்கும் 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவாகும். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும் படிக்க | குடியரசுத்தலைவர் பழங்குடியின கைம்பெண் என்பதால் புதிய நாடாளுமன்றதிற்கு அழைக்கப்படவில்லையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News