மக்கள் விரும்பியதாலேயே அரசு செலவில் சிலைகளை வைத்தேன்: மாயாவதி

மக்கள் விரும்பியதாலேயே உத்தரப்பிரதேசத்தில் அரசு செலவில் எனது சிலையை வைத்தேன் என உச்சநீதிமன்றத்தில் மாயாவதி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Apr 2, 2019, 11:51 AM IST
மக்கள் விரும்பியதாலேயே அரசு செலவில் சிலைகளை வைத்தேன்: மாயாவதி title=

மக்கள் விரும்பியதாலேயே உத்தரப்பிரதேசத்தில் அரசு செலவில் எனது சிலையை வைத்தேன் என உச்சநீதிமன்றத்தில் மாயாவதி தெரிவித்துள்ளார்!!

டெல்லி : மாயாவதி ஆட்சியின் போது அரசு செலவில் அவருக்கும், கட்சி சின்னமான யானைக்கும் சிலைகள் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மாயாவதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மக்கள் விரும்பியதாலேயே உத்தரப்பிரதேசத்தில் அரசு செலவில் எனது சிலையை வைத்தேன் என் மாயாவதி கூறியுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி  நடைபெற்ற போது அவருக்கு நினைவகங்கள் பல கட்டப்பட்டன. இதில் மாயாவதி மற்றும் அவருடைய கட்சி சின்னமான யானையும் இடம்பெற்றது பல சாட்சியை ஏற்படுத்தியது. 

இதில் சுமார் 1400 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளது என விசாரணையும் தொடங்கியது. பொதுமக்களின் நிதியை கட்சியின் சிலைகளை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உதநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வளைக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் லக்னோ மற்றும் நொய்டாவில் யானை சிலைகள் மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கு ஆன செலவை மாயாவதியே திரும்ப செலுத்த முடிவெடுத்தனர். "மாயாவதி தனது சிலைகளிலும் கட்சி சின்னத்திலும் செலவழித்த பொது பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்" என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியது. 

இந்நிலையில், சிலைகள் வைத்ததற்கான செலவை திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாயாவதி மக்கள் விரும்பியதாலேயே உத்தரப்பிரதேசத்தில் அரசு செலவில் எனது சிலையை வைத்தேன் விளக்கம் கொடுத்துள்ளார். 

 

Trending News