ரயில்வே பட்ஜெட், ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது ஏன்?

மத்தியில் பாஜக அமைந்த பிறகு ரயில்வே துறைக்கு தனியாக சமர்பிக்கப்பட்ட பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 1, 2024, 01:02 PM IST
  • ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது ஏன்?
  • பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஒன்றாக பட்ஜெட்
  • 2017க்கு முன் தனி தனி பட்ஜெட் வாசிக்கப்பட்டது
ரயில்வே பட்ஜெட், ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது ஏன்? title=

ரயில்வே பட்ஜெட்டின் வரலாறு:

1924 ஆம் ஆண்டில், அக்குவொர்த் குழுவின் (1920-21) பரிந்துரைகளின்படி, ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் ரயில்வே பட்ஜெட் 1947 ஆம் ஆண்டு நாட்டின் முதல் ரயில்வே அமைச்சர் ஜான் மத்தாய் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. மத்தாய் இந்தியாவின் நிதி அமைச்சராகவும் இரண்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். 2017 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ரயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில நாட்களுக்குப் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முன்பு வழக்கமாக இருந்தது. 

மேலும் படிக்க | பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!

ரயில்வே பட்ஜெட் ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டதன் காரணங்கள்:

நவம்பர் 2016-ல், மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டை ஒன்றிய பட்ஜெட்டில் இணைக்க முடிவு செய்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017ல் முதன்முறையாக மத்திய பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்டுகளின் இணைப்பு என்பது, நிதி ஆயோகின் உறுப்பினரான விவேக் டெப்ராய் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளையும், டெப்ராய் மற்றும் கிஷோர் தேசாய் ஆகியோரால் எழுதப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்டை ஒழிப்பது' என்ற கட்டுரைகளையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் ஒரு துறை ரீதியாக இயங்கும் வணிக நிறுவனமாக தொடர்ந்து செயல்படும். அதே நேரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கான தனித்தனிய மதிப்பீடுகள் மற்றும் மானிய கோரிக்கைகள் அறிக்கை இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நிதி அமைச்சகம் ரயில்வே மதிப்பீடுகள் உட்பட ஒரே ஒதுக்கீட்டு மசோதாவை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். இதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து சட்டப்பூர்வ பணிகளும் நிதி அமைச்சகத்தால் கையாளப்படுகிறது. இந்த இணைப்பு சாலைகள், ரயில்வே மற்றும் உள்நாட்டு நீர்வழித்தடங்கள் இடையே பல்வேறு வழிகளில் போக்குவரத்து திட்டமிடலை எளிதாக்கும் என்றும் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அப்போது முதல் மத்திய நிதியமைச்சரே ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிடுவார். அந்தவகையில் இப்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | Budget 2024: சீனியர் சிட்டிசன்களின் ஆசை நிறைவேறுமா? மீண்டும் 50% வரை தள்ளுபடி கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News