வீடியோ விவகாரம்: கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் சித்தராமையா விளக்கம்!!

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து சித்தராமையா விளக்கம்!!

Last Updated : Jun 30, 2018, 10:56 AM IST
வீடியோ விவகாரம்: கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் சித்தராமையா விளக்கம்!! title=

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து சித்தராமையா விளக்கம்!!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து 12 நாள்கள் புத்துணர்ச்சி சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்களுடன் சித்தராமையா பேசிய இரண்டு வீடியோக்கள் தொலைக்காட்சிகளில் வெளியாகி வைரலானது. அதில், 'சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்யத் தேவையிருக்காது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது' என்பதுபோல பேசியிருந்தார்.

அந்த வீடியோ வெளியாகி இரண்டு நாள்களைக் கடந்திருந்தநிலையிலும் அது குறித்து சித்தராமையா விளக்கம் ஏதும் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில், நேற்று பெங்களூரில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் சித்தராமையா கலந்துகொண்டார். அதன்பிறகு வீடியோக்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சாதாரணமாக பேசுவதை வீடியோ எடுத்து அதைப் பகிரங்கமாக வெளியிடுவது நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. 

எந்தக் கோணத்தில் நான் அந்த விஷயத்தைப் பேசினேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது சரியானதா? இந்தக் கூட்டணி ஆட்சி நிலைத்து நிற்கும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்' என்று தெரிவித்தார்.

அதேபோல கர்நாடக முதல்வர் குமாரசாமியும், 'எங்கள் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பது போல ஊடகங்கள்தான் உருவாக்குகின்றன. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

 

Trending News