இந்தியாவில் நிறைய பேர் கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள். மும்பையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டுகளை வாங்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆன்லைனில் நீண்ட நேரம் காத்திருந்ததை வைத்து புரிந்து கொள்ளலாம். கிராமி விருதுகளை வென்ற பிரபல ராக் இசைக்குழுவான கோல்ட்ப்ளே அவர்களது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 2025ல் மும்பையில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது. முன்பு ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர். பிறகு இங்குள்ள ரசிகர்களின் பேராதரவை பார்த்து, ஜனவரி 21 அன்று ஒரு கூடுதல் இசை நிகழ்ச்சியை சேர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.
டிக்கெட்டின் விலை மூன்று லட்சம் ரூபாய்!
கோல்ட்பிளே இசை குழு அவர்களது மூன்றாவது இசை நிகழ்ச்சியை சேர்த்திருந்தாலும், பல ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க முடியாமல் சோகமாக இருந்தனர். இதற்கான டிக்கெட்டுகள் BookMyShow என்ற இணையதளத்தில் அதிகார்வப்பூர்வமாக விற்கப்படுகிறது. ஆனால் அதில் விற்பனை முடிந்தவுடன் வேறு சில இணையதளங்கள் அதிக பணத்திற்கு விற்கின்றன. உதாரணமாக, Viagogo என்ற தளத்தில், டிக்கெட்டுகளின் விலை ரூ. 3 லட்சம் வரை பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற தளங்களில் இருந்து டிக்கெட் வாங்க வேண்டாம் என்று BookMyShow எச்சரிக்கை விடுத்தாலும், இன்னும் விக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் உள்ள "லவுஞ்ச்" பிரிவிற்கான டிக்கெட்டுகள் முதலில் BookMyShow-ல் ரூ. 35,000க்கு விற்கப்பட்டன. இருப்பினும், சிலர் இந்த லெவல் 1 டிக்கெட்டுகளை ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் போன்ற அதிக விலைக்கு விற்க முயற்சிக்கின்றனர். இது போன்ற பிற தளங்களில் இருந்து நீங்கள் டிக்கெட்டுகளை வாங்கினால், அவை செல்லுபடியாகாது என்று BookMyShow எச்சரித்துள்ளது. "இந்தியாவில் கோல்ட்ப்ளேயின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சில அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் அந்த டிக்கெட்டுகள் உண்மையானவை அல்ல. இதுபோன்ற டிக்கெட்டுகளை விற்பது இந்தியாவில் உள்ள சட்டத்திற்கு எதிரானது, ரசிகர்கள் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்" என்று BookMyShow அறிவுறுத்துகிறது.
BookMyShow மீது குற்றசாட்டு
சில கோல்ட்பிளே ரசிகர்கள் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளைப் பெற முடியாததால் மிகவும் வருத்தமடைந்தனர். பிற தளங்களில் இருந்து வாங்கிய டிக்கெட்டுகள் செல்லாது என்று எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை. சில ரசிகர்கள் புக்மைஷோ தான் பிற இணையதளம் மூலம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றம் சாட்டுகின்றனர். புக்மைஷோ டிக்கெட்டுகளை வாங்கிய நபருடன் இணைக்கவில்லை, எனவே யார் வேண்டுமானாலும் டிக்கெட்டை வாங்கி அதிக பணத்திற்கு விற்கலாம் என்று குற்றம் சாட்டினர். சில ரசிகர்கள் புக்மைஷோ பணக்காரர்கள், பிரபலமானவர்கள் மற்றும் அதன் சொந்த ஊழியர்களுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யாமல் சேமித்து வைப்பதாக கூறுகின்றனர்.
How does @viagogo get Coldplay tickets at the same time as @bookmyshow but at black market prices several times higher? Clearly there's a nexus and BMS is selling them to Viagogo. This is screaming scam! pic.twitter.com/ZgHmE8JMpp
— Vijaynarain (@Vijaynarain) September 22, 2024
மேலும் படிக்க | ரூ. 171 கோடி மதிப்புள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு! வெளியான புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ